நிதிஷ் குமார் அரசு தூக்கத்திலிருந்து எழுந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும்.. காங்கிரஸ்

நிதிஷ் குமார் அரசு தூக்கத்திலிருந்து எழுந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும்.. காங்கிரஸ்

பீகாரில் கனமழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக அம்மாநிலத்தின் 11 மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக என்.டி.ஆர்.எப். மற்றும் எஸ்.டி.ஆர்.எப்.-ன் 22 குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன. மேலும் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஐ.ஏ.எப். உணவு பொட்டலங்களை போட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முறையான நடவடிக்கைகளை முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு எடுக்கவில்லை என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

நிதிஷ் குமார் அரசு தூக்கத்திலிருந்து எழுந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும்.. காங்கிரஸ்

முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினருமான அகிலேஷ் பிரசாத் சிங் இது தொடர்பாக கூறியதாவது: பீகாரில் நிதிஷ் குமார் ஆட்சிக்கு வந்தது முதல் வெள்ள கட்டுப்பாடு சீராக செயல்படவில்லை. அதன் வெளிப்பாடுதான் பீகாரின் பாதி மற்றும் வடக்கு பீகாரின் 4ல் 3 பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. மக்கள் தப்பி ஒட நிர்பந்திக்கப்படுகிறார்கள்.

நிதிஷ் குமார் அரசு தூக்கத்திலிருந்து எழுந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும்.. காங்கிரஸ்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்கோ அல்லது விலங்குகளுக்கு உணவு அளிப்பதற்கோ எந்தவொரு ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. அரசு தூக்கத்திலிருந்து எழுந்து, மக்களுக்கு அதிகபட்ச உதவி வழங்க நனவுடன் செயல்பட வேண்டும். பீகாரில் பேரழிவு வெள்ளத்தால் 100க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி உள்ளனர். உயிர் மற்றும் சொத்துக்களை இழந்துள்ளனர். பீகார் மற்றும் அசாமில் முன்கூட்டியே வெள்ள கட்டுப்பாடுகள் தயாராக இருந்தன. ஆனால் பீகாரில் நிதிஷ் குமார் ஆட்சியில் அது போன்று எதுவும் நிகழவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.