பீகாரில் மின்னல் தாக்கி மீண்டும் 20பேர் பலி!

பீகார் மாநிலத்தில் நேற்றையதினம் மட்டும் மின்னல் தாக்கி 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அதிகபட்சமாக போஜ்பூர் மாவட்டத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். ஸாரன் மாவட்டத்தில் 5 பேரும், கய்மூர் மாவட்டத்தில் 3 பேரும், பாட்னாவில் இரண்டு பேரும், பக்சரில் ஒருவர் என 20 பேர் மின்னல் தாக்கி உயிர் மாண்டுள்ளனர். இத்துயரச் சம்பவம் குறித்து ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

அதேநேரம், பேரிடர் மேலாண்மைத் துறையின் அறிவுறுத்தல்களை பின்பற்றி எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொதுமக்களை முதலமைச்சர் கேட்டுக்கொண்டார். பீகாரில் மின்னல் தாக்கியதில் கடந்த 10 நாட்களில் 130க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular

30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறுவை நெல் சாகுபடியில் சாதனை படைத்த தமிழக அரசு!

தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.87 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டிருப்பது தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் சாதனையாக கருதப்படுகிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த...

தமிழகத்தில் கொரோனாவால் 43 மருத்துவர்கள் உயிரிழந்ததாக வெளியான செய்தி தவறானது – அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் கொரோனாவால் 43 மருத்துவர்கள் உயிரிழந்ததாக வெளியான செய்தி தவறானது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், “கொரோனாவால் பாதிக்கப்பட்ட 77.8% குணமடைந்துள்ளனர். உயிர்காக்கும் மருந்துகள் தமிழகத்தில்...

கொரோனாவுக்கு தமிழகத்தில் 43 மருத்துவர்கள் மரணம் என்று வதந்தி பரப்பிய உதயநிதி! – மருத்துவர்கள் கண்டனம்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக 43 மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டதாக இந்திய மருத்துவ அசோசியேஷன் கூறியதாக ஒரு தவறான தகவலை தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பரப்பிவருவதற்கு கண்டனங்கள் எழுந்துள்ளன. தமிழகத்தில் தற்போது கொரோனா...

தமிழகத்தில் இன்று 5,063 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 2.68 லட்சமாக உயர்வு!!

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் ஒரு கோடியே 82 லட்சமாக அதிகரித்துள்ளது. 6 லட்சத்து 92 ஆயிரம் பேரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா வைரசுக்கு...