• April
    03
    Friday

Main Area

Main



பிகில் படத்தின் ‘வெறித்தனம்’ பாடலை பாடுகிறார் நடிகர் விஜய் 

Bigil
Bigil

பிகில் படத்தில்வரும் வெறித்தனம் என்ற பாடலை நடிகர் விஜய் பாடுகிறார் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தெறி, மெர்சல் படங்களைத் தொடர்ந்து விஜய் - அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள படம் பிகில். பெண்கள் காலபந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் பயிற்சியாளராக நடிக்கிறார் விஜய். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். விஜயின் பிறந்த நாளையொட்டி இதுவரை இந்த படத்தின் 3 போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. இந்நிலையில் படத்தின் முதல் பாடலான வெறித்தனம் என்ற பாடலை நடிகர் விஜய் பாடுகிறார் என்றும் அந்த பாடல் வரிகளை பாடலாசிரியர் விவேக் எழுதுகிறார் என்றும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

2018 TopTamilNews. All rights reserved.