• April
    03
    Friday

Main Area

Main



பிகில்: இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக டெல்லி செல்லும் படக்குழு! 

பிகில்
பிகில்

தெறி,மெர்சல் படங்களின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து தற்போது அட்லீ -விஜய் கூட்டணியில் உருவாக்கி வரும் திரைப்படம் பிகில். மேலும் இதில் நயன்தாரா, இந்துஜா, கதிர்,விவேக்,யோகி பாபு,டேனியல் பாலாஜி என்று ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. 

பெண்கள் கால்பந்து விளையாட்டு மையமாகக் கொண்ட உருவாகிவரும் இதில் விஜய் மைக்கேல் என்ற கதாபாத்திரத்தில் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். 

விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு பிகில் படத்தின் மூன்று போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் சென்னையில் உள்ள கல்லூரி வளாகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த படப்பிடிப்பு, இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக இம்மாத இறுதியில் டெல்லி செல்லவுள்ளதாகக் கூறப்படுகிறது. 

மெர்சல், சர்கார் என அடுத்தடுத்து இரு தீபாவளி பண்டிகைக்கு ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்த விஜய் இந்த முறை பிகில் மூலம் களமிறங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

2018 TopTamilNews. All rights reserved.