டிக்கெட் டூ பினாலே டாஸ்க் : 5வது டாஸ்கில் வெற்றி பெற்ற ரியோ

 

டிக்கெட் டூ  பினாலே  டாஸ்க் : 5வது டாஸ்கில் வெற்றி பெற்ற ரியோ

இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

டிக்கெட் டூ  பினாலே  டாஸ்க் : 5வது டாஸ்கில் வெற்றி பெற்ற ரியோ

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. தற்போது பிக் பாஸ் போட்டியில் 7 பேர் உள்ள நிலையில் டிக்கெட் டூ பினாலே டாஸ்க் நடைபெற்று வருகிறது. நேற்றுமுன்தினம் கொடுத்த 2 டாஸ்க்குகளில் பாலா முதலிடம் பிடித்தார். இரண்டாவது டாஸ்க்கில் ரம்யா முதலிடம் பிடித்தார். நேற்று கொடுக்கப்பட்ட 3வது டாஸ்க்கில் பாலா முதலிடமும், 4வது டாஸ்க்கில் ஷிவானி முதலிடமும் பிடித்தார்.

இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள ப்ரோமோவில், டிக்கெட் டூ பினாலே டாஸ்க் 5 இல், பந்தை வளையத்திற்குள் வைத்து சுற்றிக்கொண்டே இருக்க வேண்டும். வளையத்திற்குள் இருக்கும் பந்து நின்று விட்டாலோ, கீழே விழுந்து விட்டாலோ, நீங்கள் போட்டியிலிருந்து வெளியேற்றப்படுவீர்கள். யார் கடைசி வரை வளையத்திற்குள் பந்தை சுற்றுகிறாரோ அவரே வெற்றியாளர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் கடைசியில் ரியோ வெற்றி பெறுவது போல ப்ரோமோ வீடியோ முடிகிறது.