கேப்ரியல்லா Vs ஷிவானி – பாலா யார் பக்கம்? #BiggBoss4

 

கேப்ரியல்லா Vs ஷிவானி – பாலா யார் பக்கம்? #BiggBoss4

’பாம்பும் கீரியும் சண்டை போடப்போகுது’னு வித்தைக் காட்டறதை நாம் கடைத்தெருவில் அடிக்கடி பார்த்திருப்போம். ஆனால், கடைசி வரைக்கும் ரெண்டும் சண்டையே போட்டுக்காது. அப்படி போட வெச்சிட்டா, அவர் அடுத்த ஷோ நடத்த முடியாது. அந்த மாதிரி கதையாத்தான் பிக்பாஸ் சீசன்4 இருக்கு. அனிதா – சுரேஷ், ஆரி – பாலாஜி, சனம் – ஆரி என அப்பப்ப சண்டை வர போகுதுன்னு டீசர் மட்டும்தான் வருது. இப்போ நிஜமாகவே ஒரு சண்டை நேற்றைய எப்பிசோட்டில். 

பிக்பாஸ் 37-ம் நாளின் தொடர்ச்சி

கேப்ரியல்லா Vs ஷிவானி – பாலா யார் பக்கம்? #BiggBoss4

’பாட்டிச் சொல்லைத் தட்டாதே’ டாஸ்க்கில் ரம்யா, கேபி, சோம்ஸ் குரூப் பத்திரத்தை எடுத்து ஒளியவெச்சிட்டாங்க. அதை யார் எடுத்திருப்பாங்கனு பாட்டியம்மா அர்ச்சனா தலைமையில் ஒரு மீட்டிங்.

எல்லோர் பெட்லேயும் தேடலாம்னு முடிவானதும், கேபி அதுக்கு மறுப்பு தெரிவித்தது ஒரு ட்விஸ்ட். கூடவே ரம்யாவும் சேர்ந்துகொண்டார். அவர்களிடம் இல்லை என்றாலும் விளையாட்டில் சுவாரஸ்யம் சேர்த்தது. இது நல்ல உத்திதான் இவர்களிடம் இருக்குமோ என்ற எண்ணத்தை எல்லோருக்கும் வர வழைத்தால் சோம் மீது சந்தேகம் வராது.

கேப்ரியல்லா Vs ஷிவானி – பாலா யார் பக்கம்? #BiggBoss4

உடனே தீர்மானம் எடுத்து, ஆளாளுக்கு தீவிரமாக தேடிட்டு இருக்கையில் குறட்டை சத்தம் கேட்டுச்சு. யாருன்னு பார்த்தா, நம்ம ஜித்தன். ஏங்க அண்ணாச்சி நீங்க சும்மாவே இருக்கீங்கனு சொல்லித்தானே கேரக்டரெல்லாம் கொடுத்தாங்க. இப்பவும் தூங்கினா, பிக்கி என்னதான் பண்ணுவார் சொல்லுங்க.

இன்னொரு பக்கம், ‘சீக்கிரம் பஸ்ஸர் அடிக்க பிக்பாஸ்… ரொம்ப நேரம் நடிக்க முடியலை’னு கெஞ்சிட்டு இருந்தார் ரம்யா. இப்படி கெஞ்சினா ரசிச்சிகிட்டே பஸ்ஸரை அடிச்சாலும் அடிச்சிடுவார் நம்ம பிக்கி.

பத்திரத்தை திருடினது சோம்தான் என பாலாவுக்கு ஆரம்பத்திலிருந்தே சந்தேகம். இந்த களேபாரத்தில் இடையில பாலா பத்திரத்தை எடுத்து, அதில் இருந்த பேப்பரை மட்டும் எங்கோ ஒளிச்சு வெச்சிட்டார். அவரின் கையாள் சுசித்ரா. இந்தச் சதிச்செயல் ரம்யாவின் பார்வையில் பட, அவர் சோம் அண்ட் கேபியிடம் சொல்ல சண்டைக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டது.

கேப்ரியல்லா Vs ஷிவானி – பாலா யார் பக்கம்? #BiggBoss4

பாலாவை விதவிதமாகக் கேட்டுப்பார்த்தார் சோம். உனக்கு கொடுக்கத்தான் நான் எடுத்து வெச்சிருக்கனா? என்பதுபோல புறங்கையால் தட்டி விட்டார் பாலா. வழக்கம்போல டைனிங் டேபிளில் பஞ்சாயத்தைக் கூட்டினார் கேபி.

’பத்திரத்தை நீதானே வெச்சிருக்க’னு கேபி ஆரம்பிச்ச பேச்சு வார்த்தையில ஓர் இடத்துல ‘ஹானஸ்ட்டா விளையாடுங்க’னு முதன்முதலா சொன்னது பாலாதான். அப்பதான் அந்த வார்த்தையை நூல் பிடிச்சு, ’நீ ஹானஸ்ட்டா சொல்லு.. பத்திரத்தை எங்கே வெச்சிருக்க?’னு கேபி கேட்க, ‘என்னை விட வேற யாரு ஹானஸ்ட் இருக்கா’னு கூலா கேட்டுட்டு போயிட்டார். ஆனா, வெளியில சுசி அண்ட் ஷிவானி இருவரும் பாலா எப்போ வெளியே வருவார்ன்னு காத்திட்டு இருந்தாங்க. அவர் தலை தெரிஞ்சதும் ஷிவானி கதவை திறந்து வெல்கம் கொடுத்தார். ஆனாலும், இந்தப் பொண்ணு பாலாவுக்கு ரொம்பதான் பணிவிடை செய்யுது. காலையில எழுப்பி விடறது, சாப்பாடு ஊட்டி விடறது, மசாஜ் பண்றதுனு யாரையோ சார்ந்திருக்க ஆசைப்படுது. சரி… சரி சண்டை விஷயத்து வருவோம்.

கேப்ரியல்லா Vs ஷிவானி – பாலா யார் பக்கம்? #BiggBoss4

‘’ஹேய்… பாலா நீ யாரு… எவ்வளவு பெரிய ஆளு… மஹாபாரதம் சீரியல்ல தர்மர் வேஷம் போட்ட்டவரு… உன்னைப்போயி ஹானஸ்ட்டா இல்லனு சொல்லிட்டாலே இந்த கேபி’னு உசுப்பேத்த… ஷிவானியே சொன்னபிறகு கேட்கலன்னா எப்படினு பாலா நரம்பு புடைக்க, உள்ளே வந்தார்.

‘அப்பறம்… பேச்சு வாக்குல அய்யாவை கெட்ட வார்த்தை சொன்னது யாரு?’னு கேட்கும் வடிவேல் போல, ‘ஹானஸ்ட் விஷயத்தை விசாரித்தார் பாலா. அதுவரைக்கு ஒழுங்கா பதில் சொல்லிட்டு இருந்தார் கேபி. ஷிவானி குறுக்கே பேசினதும் ரெளத்தமாயிட்டார். ‘நான் அவன்கிட்ட பேசற… நீ ஏன் குறுக்கே வர்ற?’னு ஒரு எகிறு எகிறினார். பதிலுக்கு ‘வாய்ஸ் ரைஸ் பண்ணாதே’னு சொன்ன ஷிவானிக்கு ‘அப்படித்தான் பண்ணுவேன்.. என்னா பண்ணுவே?’னு பாலா ஸ்டைலில் பதில் கொடுக்க ஆடிபோய்ட்டார். ஷிவானி சண்டை போடறது அதிர்ச்சியா பார்த்தார் ரியா. இந்தப் புள்ளைக்கு சண்டையெல்லாம் போடத்தெரியுமா என்று கண்ணாலே கேட்ட மாதிரி இருந்துச்சு.

கேப்ரியல்லா Vs ஷிவானி – பாலா யார் பக்கம்? #BiggBoss4

என்னடா இது நாம ஒரு பக்கம் வண்டியைத் திருப்பினா வேற பக்கம் போகுதேன்னு நினைச்ச பாலா, குறுக்கு கைகளை நீட்டி சமாதானப் படுத்த ட்ரைப் பண்ணினார். பேச்சு நீள… ‘என்னை யாராவது பொய்யன்னு சொன்னா இருக்கு கதை’னு மிரட்டிட்டு இருந்தார். உச்சபட்ச கோபத்தில் வார்த்தைகளைக் கொட்டினார் பாலா. உண்மையில் பல நேரங்களில் பாலா பொறுமையாக இருப்பதுபோல தெரியும். ஆனா, உண்மையில் அது பொறுமை இல்லை. கோபத்தை அடக்கிக்கொண்டிருக்கிறார். சீக்கிரமே அது உடையும்போது டபுள் ட்ரிபுள் மடங்காகி சாதாரண பிரச்சனையே சீரியாஸா மாறிடும். அதுக்குப் பதில் பட்டுன்னு ரியாக்ட் பண்றதே பெட்டர். இப்பவும் அப்படித்தான் நடந்துச்சு.

கேபிக்கு ஷிவானி மேல செம கடுப்பாயிட்டு போல. ‘ஹானஸ்ட் கேட்டது பிரச்ன்னைனா.. உடனே கேட்காம ஏன் லேட்டா கேட்கிறீங்கனு ரம்யா கேட்டதுக்கு, ஷிவானி கேம் ஆடுவதை போட்டு உடைத்தார் கேபி.

கேப்ரியல்லா Vs ஷிவானி – பாலா யார் பக்கம்? #BiggBoss4

எந்த சண்டைக்குப் பின்னும் பழைய பகை இருக்கும்னு சொல்வாங்க. ஆரம்பத்திலேயே பாலா, கேபியை தங்கச்சினு சொல்லிட்டாலும் கேபிக்கு அது பிடிக்கல. அழகான  பெண் ஒருவரை அண்ணான்னு கூப்பிட்டதும் என்ன வருத்தம் வருமோ அதே வருத்தம் அழகான பெண்ணை ஒருவர் தங்கச்சினு கூப்பிடும்போதும் வரும். பாலாவுடன் நட்பில் ஷிவானி குறுக்கே வந்ததும் கேபி கழற்றி விடப்பட்டது ஊரறிந்த ரகசியம். அந்தப் புகைச்சல் இப்போது கொழுந்து விட்டு எரிந்தது. இந்த சண்டையில் பாலாவை விட ஹீட்டாக இருந்தது ஷிவானிதான். ஏப்பா, டீயை விட டீ கிளாஸ் சூடா இருக்கே.. எப்படி?

வெளியே போயும் சுசி, ஷிவானியும் ஊக்குவிப்புகள் குறைய வில்லை. சுசி மீதான பிம்பம் உடைய ஆரம்பித்துவிட்டது. காயத்ரி, வனிதா போல இந்த சீசனில் சுசித்ரா. முந்தையவர்களைப் போல சுசியால் சண்டை போட முடியவில்லை. பாலாவோடு ஒட்டிக்கொண்டார். அவரை தூபம் போட்டு கிளப்பி விடுகிறார். அவ்வளவுதான்.

கேப்ரியல்லா Vs ஷிவானி – பாலா யார் பக்கம்? #BiggBoss4

உள்ளே ரியோ உற்சாகமாக ‘வெல்கம் டூ பிக்பாஸ் சீசன்4’ என நிஜத்தைச் சொன்னார். ஆனா, பாம்பு கீரி சண்டை விடற மாதிரி புஸ்க்கு முடியுதே ரியோ! பாலாவை ட்ரிகர் பண்ணிவிடுறாங்கன்னு பேசப்பட்டது அப்பதான். பிக்பாஸ் இந்த சீசனில் ட்ரிகர் வார்த்தை முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்ட நாள்.

38 –ம் நாள்

கோவாவில் வரும் ’அடிடா மேளத்தை’ ஒலிக்க, ஹவுஸ்மேட்ஸ் ஆடத் தயாரானார்கள். ஷிவானியின் பக்கம் நின்ற ஆரி, அப்படியே ஷிவானியைப் பார்த்து காப்பி அடித்து ஆடிட்டு இருந்தார். பாஸ் இப்படி ஆடினா, லக்ஸரி பட்ஜெட்டில் குறைப்போம்னு சொல்லுங்க பிக்கி.

கேப்ரியல்லா Vs ஷிவானி – பாலா யார் பக்கம்? #BiggBoss4

காலை எழுந்ததும் என்ன செய்வார் ஷிவானி. பாலாவிடம் தனியா உட்கார்ந்து பேசுவார். அதே 38-ம் நாளும் தொடர்ந்துச்சு. ‘உன்கூடத்தானே சண்டை. என்கூட டாஸ்க் பண்ணலாம்ல… அவங்க டாஸ்க் பண்ணாம இருக்கிறதுக்கு நாம காரணம் இல்ல வேற யாரோ’னு பாலாவுக்கு எடுத்து கொடுத்தார். அநேகமாக பெஸ்ட் பர்ஃபார்மர் சண்டையில இது பேசப்படலாம்.

மாரினிங் டாஸ்க்கில் வாயில் வெத்தலைப் போட்டுட்டே கதை பேசற டாஸ்க். வரிசையாக வரும்போது ரம்யாவிடம் ஜொள்ளு ஊத்தினார் சோம்ஸ். சுமரான பதிலடியையும் ரம்யா கொடுக்க, ரம்யா ஆர்மி செமி ஹாப்பி அண்ணாச்சி.

38-ம் நாளின் காமெடி பகுதியாக ரியோவும் நிஷாவும் வெளிநாட்டிலிருந்து வரும் காட்சிகள் அமைந்திருந்தன. அதுவும் நான் குடிச்ச காபி ரொம்ப இனிப்பா இருக்குனு சொன்னீங்களே டார்லிங் என நிஷாவின் டயலாக்குக்கு ரியோவின் ரிப்ளே செம. வாய்யா… வாய்யா.. உங்கிட்ட இப்படியான கண்டண்ட்தான் எதிர்பார்க்கிறாரு பிக்கி. இருவருக்கும் நல்லா காமெடி செட்டாகுது. வெளியே வந்தால் படங்கள்லகூட வாய்ப்பு கிடைக்கலாம்.

கேப்ரியல்லா Vs ஷிவானி – பாலா யார் பக்கம்? #BiggBoss4

பாட்டியாக போய் பாலாகிட்ட பத்திரத்தைக் கேட்டாலும், பாலாவின் ஆட்டியூட் கடுப்பேத்த வெளியேறினார் அர்ச்சனா. கேரக்டரா மாறிட்டதா நினைச்சு அனிதா செய்தவை அச்சுபிச்சு. ‘முதல்ல பீரோவிலிருந்து யார் திருடினது யார்ன்னு ஒத்துக்கோங்க.. பிறகு யார் பத்திரத்தைக் கொடுக்கிறேன்… எனக்கு யாரும் மரியாதை கொடுக்கல… எனக்கு இந்த வீட்டுல யாரையும் பிடிக்கல…’ அப்படின்னு மொத்த விளையாட்டையும் தம் பக்கம் திருப்பிட்டு இருந்தார் பாலா.

கேப்ரியல்லா Vs ஷிவானி – பாலா யார் பக்கம்? #BiggBoss4

பாலாவின் இந்த ஸ்ட்டேடர்ஜியைச் சரியாகப் புரிஞ்சிகிட்டவர் ரியோதான். அதனாலதான், பாலாவை அட்டாக் பண்ணியாவது பத்திரத்தை பிடிங்கச் சொன்னப்ப, மறுத்து இந்த விஷயத்தை உடைச்சார். ஆனா, என்ன செய்ய கடைசி ஓவர்ல 70 ரன் வேண்டியிருக்க மாஞ்சு மாஞ்சு சிக்ஸர் அடிக்கும் தோனி போலதான். அத்தோடு டாஸ்க் ஆட்டம் முடிஞ்சுது பெல் அடிச்சிட்டார் பிக்பாஸ்.

இன்னிக்கு சொல்ல நிறைய விஷயங்கள் இருக்கு எனும் உற்சாகம் பொங்கும் குரலில் பின்கதையாடலை ஆரம்பித்தார் பிக்கி.

பிக்பாஸ் பற்றிய அப்டேட்மற்றும் கட்டுரைகளைப் படிக்க இங்கே கிளிக் செய்க.