ஆரி டாஸ்கில் கயிற்றை விட்ட காரணம் இதுதான் – பிக்பாஸ் 96-ம் நாள்

 

ஆரி டாஸ்கில் கயிற்றை விட்ட காரணம் இதுதான் – பிக்பாஸ் 96-ம் நாள்

இன்னும் சில நாட்களே இருக்கின்றன பிக்பாஸ் சீசன் 4 முடிய. ஆனால், இன்னும் சுவாரஸ்யமான டாஸ்க்குகளே கொடுக்கப்பட வில்லை அல்லது கொடுக்கப்பட்ட டாஸ்க்குகளை ஹவுஸ்மேட்ஸ் சுவாரஸ்யமாக ஆட வில்லை. இதையே பலரும் பலமுறை சொல்லி விட்டார்கள். ஆனாலும் எந்த மாற்றமும் இல்லை. நேற்று கொஞ்சம் பரவாயில்லை என்று சொல்லும்படியான எப்பிசோட்.

பிக்பாஸ் 96-ம் நாள்

ஆரி டாஸ்கில் கயிற்றை விட்ட காரணம் இதுதான் – பிக்பாஸ் 96-ம் நாள்

மாஸ்டர் படத்தின் ’குட்டி ஸ்டோரி’ பாட்டுப் போட்டு எல்லோரையும் எழுப்பினார் பிக்கியின் தம்பி. இப்போதெல்லாம் பாலா வேக்கப் ஸாங்குக்கு ஆட வருவதே இல்லை. ஒருவேளை எழுப்புவதற்கு ஆள் இல்லை என்றதும் தூங்கிக்கொண்டே இருக்கிறாரார் போல.

நேரடியாக, கருத்து சொல்லும் டாஸ்க்குக்கு வந்தார். முதன்நாள் போலவே வாக்கியங்கள் கொடுத்து அதற்கு யார் பொருத்தமான நபர் என்று ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும். ரொம்ப போர்-ஆன டாஸ்க் அது.

ஆரி டாஸ்கில் கயிற்றை விட்ட காரணம் இதுதான் – பிக்பாஸ் 96-ம் நாள்

வழக்கம்போல எல்லாவற்றிற்கும் பாலா – ஆரியையே சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஆரி ஒரு வாக்கியத்திற்கு ரம்யாவை காலி பண்ணினார். இன்னொரு வாக்கியத்திற்கு பாராட்டினார். அதேபோல பதில் மரியாதையை ரம்யாவும் ஆரிக்குச் செய்தார். ஆனால், ப்ரோமோவில் ஆரியை சாகசகாரனாக மாற்றுவதில் குறியாக இருக்கிறார்கள் பிக்பாஸ் எடிட்டர்ஸ். ஒருவேளை அவர்களும் ஆரி ஆர்மி போல.

சொல்வதைத் தெளிவாகச் சொல் என ரியோவைச் சொல்லும்போது பாலா சொன்னவை ரியோவை காயப்படுத்தியதாக ஃபீல் பண்ணினார். இறுதியாக அதிக ரெட் கார்டுகளை வாங்கி ஆரி 7-ம் இடத்தில் பாலா 6- இடத்திற்கு வந்தார்கள்.

ஆரி டாஸ்கில் கயிற்றை விட்ட காரணம் இதுதான் – பிக்பாஸ் 96-ம் நாள்

இருக்கிற இடம் தெரியாம கம்னு இருக்கணும்னு மாதிரி இருக்கும் சோம் முதல் இடத்தைப் பெற்றார். ஆச்சர்யம்தான். ’வீட்டுக்குள் நமக்கு இந்த நம்பர். வெளியில வேற நம்பர்’ பன்ச் டயலாக் பேசினார் ஆரி. அவர் பேசுவதை எல்லாம் வைத்துப் பார்க்கையில் ஆரி தினமும் சோஷியல் மீடியா செக் பண்ணுகிறார் என்றே தோன்றுகிறது.

பற்களைச் சுத்தம் செய்யும் டாஸ்க் வைக்கப்பட்டது. அதில் இரு அணிகளாக பிரிந்து வேலை செய்தார்கள். ஆரி, சோம், ரம்யா ஒரு டீம். ரியோ, கேபி, ஷிவானி ஒரு டீம். இரு டீம்களும் உயிரைக் கொடுத்து சுத்தம் செய்துகொண்டிருந்தார்கள். ஆரி டீம்க்கு தண்ணீர் தீர்ந்துபோகவே, டக்கென்று டீ சர்ட் கழற்றி துடைத்தார். இறுதிநாள் நெருங்க நெருங்க சந்திரமுகியாகவே மாறிட்டு இருக்கார் மனுஷன்.

ஆரி டாஸ்கில் கயிற்றை விட்ட காரணம் இதுதான் – பிக்பாஸ் 96-ம் நாள்

ஆனால், ஷிவானி இருக்கும் டீம்தான் ஜெயிக்கணும் எனப் போட்டி தொடங்கும் முன்பே பாலா முடிவு செய்துவிட்டதால் அதன்படியே முடிவு அறிவிக்கப்பட்டது. ஆரி மைண்ட்ல வெச்சிகிட்டார். அநேகமாக போரிங் பர்ஃபார்மருக்கு இந்த பாயிண்ட்டை அவர் சொல்லலாம்.

அடுத்த டாஸ்க்தான் சுவாரஸ்யமானது. வட்டமாக நின்று ஆளுக்கொரு கயிற்றை இரு கைகளாலும் பிடித்துக்கொண்டிருக்க வேண்டும். ஆனால், போட்டித் தொடங்கிய இரண்டாம் நிமிடத்திலேயே பாலா ஒரு கையை எடுத்து விட்டார்.

சிறிது நேரத்தில் பேச்சின் சுவாரஸ்யத்தில் வாயை மூட ரியோ ஒரு கையை எடுத்து விட்டார். ரம்யா முதுகு வலிக்குது… முதுகு வலிக்குது என சொல்லிக்கொண்டே நிலைத்து நின்றுக்கொண்டிருந்தார்.

ஆரி டாஸ்கில் கயிற்றை விட்ட காரணம் இதுதான் – பிக்பாஸ் 96-ம் நாள்

கையை நீட்டாமல் பேசவே முடியாது ஆரியால். பாலாவை கார்னர் செய்வதாக நினைத்து பேச்சுகொடுக்க, தன்னையுமறியாமல் ஒரு கையை கயிற்றிருந்து எடுத்துவிட்டு நீட்டி பேசிவிட்டார். ஆரியின் வார்த்தைகளால் கடுப்பான பாலா கயிற்றை விட்டு போட்டியிருந்து விலகினார். அடுத்து ஆரியும் விலகினார்.

அடுத்து ரியோ, அதற்கடுத்து சோம், அதற்கு அடுத்து கேபி என வரிசையாக விலகினர். சோம், கேபி விலகியதும் ரியோவால் டென்ஷனைத் தாங்க முடியாமல் பந்தை எடுத்து கோபத்துடன் விட்டெறிந்தார். இறுதியாக மிஞ்சி இருப்பது ரம்யாவும் ஷிவானியும்தான். சிங்கபெண்ணே பாடலைப் போட்டு இருவரையும் அழ வைத்தார் பிக்கி. உண்மையில் இது உடல் வலு உள்ளவர்கள் வெல்லகூடிய போட்டி. ஆனால் உடல் வலு அதிகம் என்று சொல்லிக்கொள்ளும் பாலா – ஆரி இருவரும் சீக்கிரமே போட்டியிலிருந்து விலகினார்கள். இறுதியில் மிஞ்சி நிற்பது இரு பெண்களே. அதற்காக யார் வென்றாலும் பாராட்டலாம்.

ஆரி டாஸ்கில் கயிற்றை விட்ட காரணம் இதுதான் – பிக்பாஸ் 96-ம் நாள்

ப்ரோமோவில் பந்துகளை ஒருவர் மீது ஒரு அடிக்கும் காட்சிகள் காட்டப்படுகின்றன. எல்லோருக்குமே அப்படி ஒரு கூடையில் பந்து வைத்திருந்தார் பிக்கி. ஆனால், இவங்கதான் எதையுமே சுவாரஸ்யமாகச் செய்ய மாட்டார்களே… டக் டக்கென்று கயிற்றை விட்டு போட்டியை முடித்து தூங்க ரெடியானார்கள்.

சோம்க்குத்தான் இறுதிப்போட்டிக்கான டிக்கெட் கிடைப்பது உறுதியாகி விட்டது. ஏனெனில், அவர்தான் ரொம்பவும் லீடிங்கில் இருக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் ரியோ இருக்கிறார். அவர் சோம்க்கு முன்பே கயிற்றை விட்டு விட்டார். இம்முறை சோம் 4 இடத்தில் இருப்பதால் 4 மதிப்பெண்கள் கிடைக்கும் எனவே அவருக்கே இறுதி போட்டிக்குச் செல்லும் டிக்கெட் கிடைக்கும் வாய்ப்பு உறுதியாகி விட்டது.