நாமே தீர்வு… வெளியானது பிக்பாஸ் 4 ப்ரோமோ!

 

நாமே தீர்வு… வெளியானது பிக்பாஸ் 4 ப்ரோமோ!

விஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசன் விரைவில் தொடங்கவுள்ளதாக ப்ரோமோ வெளியாகியுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழ் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பிக்பாஸ் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியின் அடையாளமாக மாறியுள்ளார். அவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விதம் ரசிகர்களிடையே மிகப்பெரிய ஆதரவைப் பெற்றுள்ளது. முதல் மூன்று சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் 4 சீசன் எப்போது தொடங்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் கமலஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக பிக்பாஸ் 4 குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “இந்த கொரோனா வைரஸ் இந்த உலகமே ஒரு சின்ன கிராமம் என்பதை நமக்கு உணர்த்தி விட்டது. அதற்காக நாம் வேலை இல்லாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்க முடியாது. நம்மை நம்பி இருப்பவர்களை நாம் காப்பாற்ற வேண்டும். அதனால் உலக சுகாதார மையம் தெரிவித்த அறிவுரையின்படி நாம் பாதுகாப்பாக வேலை செய்வோம். நான் என் வேலையை தொடங்கி விட்டேன், வேலையை ஆரம்பிப்போமா?” என தெரிவித்துள்ளார். விரைவில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் யார் யாரெல்லாம் பங்கேற்கிறார்கள் என்ற தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.