Home சினிமா சிறப்பு விருந்தினர்களா… game spoilers ஆ! 103– பிக்பாஸ் –ம் நாள்

சிறப்பு விருந்தினர்களா… game spoilers ஆ! 103– பிக்பாஸ் –ம் நாள்

வீடே நிறைந்திருந்த நாள். இந்த சீசன் தொடக்கத்தில் உள்ளே வந்தவர்கள்… இடையில் அனுப்பப்பட்ட அர்ச்சனா, சுசித்ரா உள்ளிட்டோரும் இணைந்துகொள்ள சோபா ஏரியாவில் எக்ஸ்ட்ரா சேர் போட வேண்டிய நிலைமை.

சிறப்பு விருந்தினர்களா… game spoilers ஆ! 103– பிக்பாஸ் –ம் நாள்

வேக்கப் பாடலுக்கு மீண்டும் எல்லோரும் சேர்ந்து ஆடிய காட்சி. வழக்கமாக முதல் வரிசையில் ஆடும் அனிதா, அப்பா மறைந்த துக்கத்தில் ஓர் ஓரமாய் உட்கார்ந்து ஆட்டத்தைப் பார்த்தார்.

சிறப்பு விருந்தினர்களா… game spoilers ஆ! 103– பிக்பாஸ் –ம் நாள்

வெளியிலிருந்து வந்தவர்கள் முடிந்தவரை இந்தப் போட்டியைக் கெடுத்து விட்டார்கள். அழகான இறுதிப் போட்டியை ஸ்பாயில் செய்திவிட்டார்கள். யார் வெல்வார்… யார் தோற்பார் என்பதை வெளியில் என்ன நிலவரமோ அதை வீட்டுக்குள் சென்று சொல்லிவிட்டார்கள். அதனால், நாளை என்னதான் கமல் வெற்றியாளரைச் சொல்ல சுவாரஸ்யமாக ஐடியா ரெடி பண்ணியிருந்தாலும் அது வேஸ்ட்தான்.

நிஷா வெளியில் தன்னை ட்ரோல் செய்ததைச் சொல்லி சிரிக்க வைத்துக்கொண்டிருந்தார். கேங்காக விளையாடு பத்தி ஒருத்தன், ‘அந்த அக்கா தனியா விளையாடணும்னா வீட்டிலேயே விளையாண்டிருப்பாங்களே… எதுக்கு பிக்பாஸ்க்கு போகணும்’னு கமெண்ட் பண்ணியிருந்தான். அதைத்தான் எடுத்து வெச்சு வெச்சு பார்த்திட்டு இருக்கேன்’ என தன்னையே கலாய்த்துக் கொண்டிருந்தார் நிஷா. அர்ச்சனா அண்ட் கோ சேர்ந்துகொள்ள கொஞ்சம் சிரிப்பு.

சிறப்பு விருந்தினர்களா… game spoilers ஆ! 103– பிக்பாஸ் –ம் நாள்

சுருட்டப்பட்ட பாய்க்குள் ஷிவானி ஒளிய வைத்து அனுப்பியிருந்தார்கள். இந்த வாரம் முழுக்கவே மூட் அவுட்டில் இருக்கும் பாலா, ஷிவானி வந்திருக்கிறார் என்றதும் ஓடிச் சென்று பார்த்தார். ஆனால், ஷிவானி ஒட்டும் ஒட்டாமல் போய்க்கொண்டிருந்தார்.

வெளியே வந்திருந்த ஷிவானி டிவியில் பாலாவின் கமெண்ட்ஸ் எல்லாம் பார்த்திருப்பார் போல. அதனால், ஒவ்வொன்றாகச் சொல்லி விளக்கம் கேட்டுக்கொண்டிருந்தார். ‘நான் ஒண்ணும் ஸ்கூல் பொண்ணு இல்ல’ என திரும்ப திரும்ப அழுத்தமாகச் சொல்லிட்டு இருந்தார்.

சுரேஷ் மீண்டும் வந்தார். உற்சாகமான வரவேற்பு கிடைத்தது. மீண்டும் பாட்டி டாஸ்க் வைக்கப்பட்டது. திருடர்கள் ஆஜித் – ரேகா. ஏன் பிக்கி, வேற ஆளே கிடைக்கலையா?

சிறப்பு விருந்தினர்களா… game spoilers ஆ! 103– பிக்பாஸ் –ம் நாள்

சயிண்டிஸ்ட்டாக முன்பு சிரிக்க வைத்த ரியோ – நிஷா இந்த முறை ஆளையே காணோம் என்றுதான் இருந்தார்கள். அண்ணன் – தங்கையாக இருந்த பால – ஷிவானி இம்முறை பேசிக்கொண்டதாகவே தெரியவில்லை. எவ்வளவு மாற்றம்.

ரேகா ரொம்ப சாமார்த்தியமாகத் திருடுவதாக நினைத்து பல முறை மாட்டிக்கொண்டார். அன்பு கேங்கை ஷனம் உசுப்பேத்தி விட, அர்ச்சனா அண்ட் கோ அழுகையால் வீட்டை நிறைத்தது. இதை பிக்கி இன்னும் சூடேற்றும் விதமாக எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை பாட்டை ஒலிக்க விட்டார்.

ரியோவிடம் ‘நீ டைட்டில் வின்னர் இல்ல’ என்று மறைமுகமாகச் சொன்னதும் ‘இதுக்குதான் 5 லட்சம் எடுத்துட்டு போயிடலாம்’னு நினைச்சேன் என்பதுபோல பரிதாபமாகப் பார்த்தார் ரியோ. அப்பறம் பாலா, ரம்யாவுக்கு வாழ்த்துகளைச் சொன்னார் அர்ச்சனா.

சிறப்பு விருந்தினர்களா… game spoilers ஆ! 103– பிக்பாஸ் –ம் நாள்

இறுதியாக சிறப்பு விருந்தினர்கள் வந்த வேலையைச் சிறப்பாக முடிக்க, இனிமே சொல்வதற்கு ஒன்றுமில்லை என்றதும் வெளியே போகச் சொன்னார் பிக்கி. அதற்கு முன் இந்த சீசனில் அழுகை காட்சிகளை ஒளிப்பரப்ப எல்லோரும் மூக்கு சிந்தினார்கள். ஷனம், அனிதா பிக்பாச் வீட்டை விட்டு வெளியே செல்லவே மனம் இல்லாமல் அழுது தீர்த்தார்கள்.

’நல்லவேளை இவங்க எல்லாம் வந்தாங்க… இல்லாட்டி நம்மளை வெளியே ரொம்ப கொண்டாடுவாங்க என எதிர்பார்த்து இருந்திருப்போம்’ என ரம்யா சொன்னார். அது ஆடியன்ஸ் இல்லை பிக்பாஸ்க்குதான். சந்தானம் ஒரு படத்துல சொல்வார் இல்ல… எல்லாம் நம்ம ஆளுங்கதான்.. ஒளிஞ்சிருக்க லட்சணம் அப்படினு’ அப்படிதான்.  

சிறப்பு விருந்தினர்களா… game spoilers ஆ! 103– பிக்பாஸ் –ம் நாள்
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

“கமலும் சீமானும் சேர்ந்தால் அரசியலில் மாஸ் காட்டலாம்” – புது ரூட்டை பிடிக்கும் கருணாஸ்!

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை ஆழ்வார்பேட்டையிலிள்ள அவரது அலுவலகத்தில் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் இன்று சந்தித்தார். இதற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், "கமல்கோவை தெற்கு தொகுதியில்...

பேய் பிடித்ததாக 7 வயது சிறுவன் அடித்துக் கொலை… தாய் உள்பட 3 பெணகள் கைது!

திருவண்ணாமலை ஆரணி அருகே பேய் பிடித்ததாக கூறி 7 வயது சிறுவனை அடித்துக்கொன்ற தாய் மற்றும் அவரது சகோதரிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிவசங்கர் பாபா மீது புகார் அளிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு!

சிவசங்கர் பாபா மீது புகார் அளிக்க சிபிசிஐடி போலீசார் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. சிவசங்கர் பாபா நடத்திவந்த சுஷில்...

‘பள்ளிகளில் புகார் பெட்டி’ பாலியல் வன்முறையில் இருந்து பாதுகாப்பது குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

பள்ளிக்குழந்தைகளைப் பாலியல் வன்முறையில் இருந்து பாதுகாப்பது குறித்த தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதல்கள் மற்றும் ஆன்லைன் வகுப்புகளுக்கான நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர் பாதுகாப்பை மேற்பார்வை செய்ய பள்ளிகளில்...
- Advertisment -
TopTamilNews