Home சினிமா 5 லட்சம் ரூபாய்க்கு கேபிரியல்லாவோடு மல்லுக்கட்டியது இவர்தான்! #பிக்பாஸ்4

5 லட்சம் ரூபாய்க்கு கேபிரியல்லாவோடு மல்லுக்கட்டியது இவர்தான்! #பிக்பாஸ்4

பிக்பாஸ் சீசனில் முக்கிய நாள் இது நேற்றைய ஒளிப்பரப்பில் இடம்பெற்றது. போட்டியின் இறுதிப் போட்டியாளர்களுக்கு ஓர் ஆசையைக் காட்டும் நாள். தங்கள் திறமை மேல் எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார்களா என்று சோதிக்கும் நாள். ரசிகர்கள் தன்னை வெற்றியடை வைப்பார்கள் என்று நம்புகிறார்களா என்று சோதனை செய்யும் நாள். ஆம். இறுதிப் போட்டியாளர்கள் எல்லோருக்கும் ஒரு வாய்ப்பு அளிக்கப்படும். அதாவது ஒரு பெட்டியில் பணத்தின் மதிப்பு எழுதப்பட்டிருக்கும். அதை ஏற்றுக்கொண்டால் இந்தப் போட்டியிலிருந்து விலக வேண்டும்.

நேற்றைய தினம் பிக்பாஸ் முக்கிய அறிவிப்புக்குப் பிறகு பெட்டி அனுப்பினார். அதாவது மற்றவர்கள் யாரும் யாருக்கும் அறிவுரை வழங்கக்கூடாது என்பதே அந்த அறிவிப்பு.

முதலில் ஒரு லட்சம் ரூபாய் பெட்டி வந்தது. பாலா ராப் எல்லாம் பாடி பணம் வேண்டாம் என்று சொல்லிவிட்டார். மற்றவர்களும் பெரிதாக பணத்தை ஏற்க வில்லை.

நேரம் நேரமாக இரண்டு, மூன்று லட்சம் என அதிகரித்தது. இது ஒருவகையில் போட்டியாளர்களின் மனதிடத்தைச் சோதிக்கும் விஷயம். மூன்று லட்சத்தை எடுத்துக்கொண்டு போட்டியை விட்டு விலகுவதா… நூறு நாட்களுக்கு மேல் போட்டியிட்ட ஸ்போர்ட்மேன்ஷிப்பை விட்டு கொடுப்பதா என்பதே. ஏனெனில், பிக்பாஸ் டைட்டில் பரிசு சுமார் 50 லட்சம் எனச் சொல்லப்படுகிறது.

மதியம் 5 லட்சம் ரூபாய் பெட்டி வந்தது. அதை ஷனம் கொண்டு வந்து வைத்த ஓரிரு நிமிடங்களில் கேபிரியல்லா முன்வந்து அந்தப் பெட்டியை எடுத்துக்கொண்டார். இது ஓரளவு எதிர்பார்த்த ஒன்றுதான். எவிக்‌ஷனிலிருந்து காப்பாற்றப்படும்போதெல்லாம் அந்த வரிசையை கேபி கவனித்துக்கொண்டும், விவாதிக்கொண்டும் இருந்திருக்கிறார். ஒருமுறை ஆரிக்கு அடுத்து ரம்யா காப்பாற்றப்பட்டபோது ‘இரண்டாவதாகக் காப்பாற்றப்படும் அளவுக்கு ரம்யா என்ன செய்துவிட்டார்?’ என்று ஆஜித்திடம் கேட்டார்.

கேபியின் இந்த முடிவு பெரிய ஆச்சர்யம் இல்லை. ஆனால், கேபியோடு இந்தப் பணத்திற்கு மல்லு கட்டியது ரியோ. ஆம், அவருக்கு இறுதியில் வெல்வோம் என்று நம்பிக்கை இல்லையோ என்ற எண்ணத்தை நேற்றைய செயல் காட்டிக்கொடுத்தது. அதற்கு சிறப்பு விருந்தினர்கள் வெளியே நடப்பவற்றை சொல்லிவிட்டார்களோ என்பதே உண்மை. இது குறித்து தனியே ஒரு கட்டுரையில் அலசுவோம்.

கேபி விடாப்பிடியாக பணத்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டு விட்டார். ஏனோ ரியோ சரியாக விடைக்கொடுக்காமல் ஒதுங்கி நின்றார். கேட் அருகே நின்றும் கேபி ‘ஸாரி ரியோ’ என்று சொன்னார். இறுதி நிமிடங்களில் அர்ச்சனா அண்ட் கோ ஒன்றுகூட பாட்டுப்பாடி கேபிக்கு விடை கொடுத்தது.

மாலையில் உறியடி, மிதிவண்டி மெது ஓட்டம் போட்டிகள் நடந்தன. உறியடிக்கு நான் நடுவரா… நான் ஆட போறேன் தல என ரமேஷ் முன் வந்தார். உடனே ஆரி நடுவராகிக் கொண்டார். ரம்யாவும் ரமேஷூம் உறியடிக்குத் தயாரானார்கள். ரம்யா எளிதாக அடித்து விட, கண்களில் கட்டியதைக் கழற்றி விட்டு அடித்து மகிழ்ந்தார் ரமேஷ்.

வேல்முருகனும் ஆரியும் மிதிவண்டி மெது ஓட்டத்தில் பங்கேற்க, சில அடிகள் ஓட்டியதும் வேல்முருகன் கீழே காலை ஊன்றி விட்டார். அதனால், எளிதாக ஆரி வென்றார். பாலா, சோம் மாதிரி யாரேனும் இந்தப் போட்டிகளில் கலந்துகொண்டிருந்தால் கொஞ்சம் சுவாரஸ்யமாக இருந்திருக்கும்.

இடையில் பொங்கல் வைத்து பொங்கல் பாடல்களை உற்சாமானார்கள். இனி வரும் நாட்களும் ஜாலி டாஸ்க்குகள்தான் இருக்கக்கூடும்.

மாவட்ட செய்திகள்

Most Popular

1-3-2021 தினப்பலன் – மாதத்தின் முதல் நாள் எப்படி இருக்கும்?

சார்வரி வருடம் I மாசி 17 I திங்கட்கிழமை I மார்ச் 1, 2021 இன்றைய ராசி பலன்!

சச்சின்-கோலி சதங்கள் அடித்ததை பார்த்தோம்.. இப்பம் பெட்ரோல், டீசல் சதம் அடிப்பதை பார்க்கிறோம்.. உத்தவ் நையாண்டி

சச்சின்-கோலி சதங்கள் அடித்ததை பார்தோம். இப்பம் பெட்ரோல் மற்றும் டீசல் சதம் அடிப்பதை பார்க்கிறோம் என்று எரிபொருள் விலை தொடர்பாக மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே கிண்டலடித்துள்ளார்.

பப்பு மீன் பிடிக்கிறார்… கடைசியில் இ.வி.எம். சரியில்லை என சொல்வர்கள்.. காங்கிரஸை தாக்கிய பா.ஜ.க. அமைச்சர்

பா.ஜ.க. தலைவர்கள் தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்யும் வேளையில், பப்பு (ராகுல் காந்தி) மீன் பிடித்து கொண்டு இருக்கிறார் ஆனால் கடைசியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் சரியில்லை என்று காங்கிரசார்...

செங்கோட்டை வன்முறைக்கு விவசாயிகள் காரணம் அல்ல…. மத்திய அரசுதான்.. அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

டெல்லி செங்கோட்டை வன்முறை சம்பவத்துக்கு விவசாயிகள் காரணம் அல்ல, அது மத்திய அரசின் சதி என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். மத்திய...
TopTamilNews