நீங்க சண்டை போடுறதுலாம் ஸ்கிரிப்டா? ரம்யாவிடம் புலம்பிய நிஷா

 

நீங்க சண்டை போடுறதுலாம் ஸ்கிரிப்டா? ரம்யாவிடம் புலம்பிய நிஷா

இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான இரண்டாவது ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இதுவரை 10 போட்டியாளர்கள் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய 6 போட்டியாளர்கள் இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். இன்னும் ஒருவார காலமே உள்ளதால், பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் ஹவுஸ்மேட்ஸை சந்திக்க சர்ப்ரைஸ் விசிட் அடித்துள்ளனர்.

நீங்க சண்டை போடுறதுலாம் ஸ்கிரிப்டா? ரம்யாவிடம் புலம்பிய நிஷா

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில், பிக் பாஸ் வீட்டுக்குள் நிஷா, அர்ச்சனா, ரமேஷ், ரேகா உள்ளிட்டோர் அதிரடியாக வந்து ஹவுஸ்மேட்ஸை திக்குமுக்காட வைக்கிறது. இதனால் ஒருவரை ஒருவர் கட்டியணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.

நீங்க சண்டை போடுறதுலாம் ஸ்கிரிப்டா? ரம்யாவிடம் புலம்பிய நிஷா

அப்போது ரம்யாவிடம் பேசும் நிஷா, நீங்க சண்டை போடுறதுல ஸ்கிரிப்டா? எப்படி அழுவுறீங்க கிளிசரின் தானே. சாப்பாடுலாம் வந்துடுமாமே? ட்ரெஸ்லாம் அயர்ன்பண்ணி தருவாங்கலாமே என்று அவர் எதிர்கொண்ட கேள்விகளை சொல்லும்படியாக ப்ரோமோ வீடியோ முடிகிறது.

கடந்த சீசன்களை போலவே உறவினர்கள் வருகை, முன்னாள் ஹவுஸ்மேட்ஸ் வருகை என பல நிகழ்வுகள் இருக்கும். இந்தமுறை கொரோனா காரணமாக கடந்த சீசன் போட்டியாளர்கள் வீடியோ காலில் பேசினர். இருப்பினும் சீசன் 3 போட்டியாளர்கள் கவின், சாண்டி, தர்ஷன், முகின் உள்ளிட்டோர் சென்றால் சிறப்பாக இருக்கும் என்பது பிக் பாஸ் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.