100வது நாளிலும் ஆரி – ரியோ இடையே சண்டை : வெளியான 2வது ப்ரோமோ!

 

100வது நாளிலும் ஆரி – ரியோ இடையே சண்டை : வெளியான 2வது ப்ரோமோ!

பிக் பாஸ் சீசன் 4 இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

100வது நாளிலும் ஆரி – ரியோ இடையே சண்டை : வெளியான 2வது ப்ரோமோ!

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. இன்று நிகழ்ச்சி தொடங்கி 100 நாட்கள் ஆகும் நிலையில் பிக் பாஸ் இறுதி போட்டிக்கு ஆரி, பாலா, சோம், ரியோ, ரம்யா மற்றும் கேபி ஆகியோர் முன்னேறியுள்ளனர். நிகழ்ச்சி முடிய இன்னும் ஒருவார காலமே உள்ளதால் வீட்டில் அனைவரும் ஆட்டம், பாட்டம் என ஜாலியாக உள்ளனர். நேற்றைய நிகழ்ச்சியில் அர்ச்சனா, நிஷா, ரேகா, ரமேஷ் ஆகியோர் வீட்டுக்குள் ரீ எண்ட்ரி கொடுத்தனர்.

இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சியில் பிக் பாஸ் வீட்டுக்குள் சம்யுக்தா, சனம் ஷெட்டி, ஆஜித், வேல்முருகன் உள்ளிட்டோர் வந்துள்ளனர். இதில் கேமிற்காக டீம் பிரிக்கும் போது கேபி உங்களுக்கு ஓகேவா? ஆரி ப்ரோ என்று கேட்கிறார். ஆரி யோசித்து தயங்கி ஓகே சொல்கிறார். அதற்கு ரியோ, ப்ரோ அவ நாலு முறை கேட்டுட்டா ஓகேன்னா சொல்லுங்க என்று ஜாலியாக கேட்க, ஆரி மீண்டும் ரியோவுடன் மல்லுக்கட்ட, நான் வேணும்னு சொல்லல , மன்னுசிடுங்க என்று ரியோ வழக்கம் போல மன்னிப்பு கேட்க ஆரியும் மன்னிப்பு கேட்டு நகர்வது போல ப்ரோமோ வீடியோ முடிகிறது.