“ஜாலியாக” கமெண்ட் அடித்த ஆரி; கட்டியணைத்து பாராட்டிய ரியோ

 

“ஜாலியாக” கமெண்ட் அடித்த ஆரி; கட்டியணைத்து பாராட்டிய  ரியோ

இன்றைய பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சிக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

“ஜாலியாக” கமெண்ட் அடித்த ஆரி; கட்டியணைத்து பாராட்டிய  ரியோ

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. வரும் ஜனவரி 17 ஆம் தேதி போட்டி நிறைவு பெறுகிறது. அதற்கு முன்பாக முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்கள் வீட்டுக்குள் எண்ட்ரி கொடுக்க உள்ளனர். தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் 7 போட்டியாளர்கள் உள்ள நிலையில் அவர்களுக்கு டிக்கெட் டூ பினாலே டாஸ்க் அளிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டி கிட்டத்தட்ட முடியும் நிலையில் உள்ளது. இதில் வெற்றி பெற போவது யார் என்ற ஆர்வம் பலருக்கும் உள்ளது.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில், வாக்கிய துண்டில் இருக்கும் வாக்கியம் யாருக்கு பொருந்தும் என்பதை காரணத்துடன் சொல்ல வேண்டும் என்ற டிக்கெட் டூ பினாலே டாஸ்க் 8 கொடுக்கப்படுகிறது. இந்த டாஸ்க்கில் ஆரி வாக்கிய சீட்டை எடுத்து, இதற்கு விளக்கம் சொல்லி நேரத்தை வீணாக்க வேண்டாம்னு நினைக்கிறேன். அப்புறம் காலத்தை அழிக்கிறேன்னு சொல்லி குத்துவீங்க என்று சொல்ல, ரியோ ஓடிவந்துஆரி ப்ரோ வந்து ஒரு கமெண்ட் எடுத்து, அத ஜாலியா சொல்லி முடிச்சிட்டு வந்துருக்காரு; ஹேப்பி என்று கட்டியணைக்கும் படியாக ப்ரோமோ வீடியோ முடிகிறது.