அக்.3ம் தேதி ஆரம்பமாகிறது பிக் பாஸ் சீசன் 5; அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!

 

அக்.3ம் தேதி ஆரம்பமாகிறது பிக் பாஸ் சீசன் 5; அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!

கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் ஒளிபரப்பப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் 5ஆவது சீசனை எட்டியுள்ளது. இதுவரை நான்கு சீசன் முடிவடைந்திருக்கும் நிலையில் ஐந்தாவது சீசனிலும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கவுள்ளார். 5வது சீசனுக்கான புரோமோக்கள் அவ்வப்போது வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுகிறது. ‘இந்த வீட்டில் கிசுகிசு பேசுவது ரொம்ப கஷ்டம் போல’ என அண்மையில் வெளியான புரோமோ ஒன்று மக்களை வெகுவாக கவர்ந்தது.

அக்.3ம் தேதி ஆரம்பமாகிறது பிக் பாஸ் சீசன் 5; அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!

இந்த நிலையில், அக்டோபர் 3-ஆம் தேதி பிக் பாஸ் சீசன் 5 ஆரம்பிக்க உள்ளதாக விஜய் தொலைக்காட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. புரோமோவில், கமல்ஹாசன் ஒரு கண்ணாடியை பார்த்து ‘அடடே வாங்க’ என பல்வேறு முக பாவங்களுடன் பேசி பார்க்கிறார். பின்னர் கேமராவை பார்த்து என்ன பாக்குறீங்க.. நான் நானாக இருக்க ட்ரை பண்றேன். ஆனா எல்லாரும் வந்துடுறாங்க. இந்த உலகத்திலேயே மிக கஷ்டமான விஷயம் என்ன தெரியுமா?… இந்த வீட்டில் நான் நானாக இருக்கிறது தான் என்கிறார். பிறகு, அக்டோபர் 3 ஆம் தேதி மாலை 6 மணிக்கு சீசன் 5 தொடங்குகிறது என்ற அறிவிப்புடன் புரோமோ முடிகிறது.

இணையதளத்தில் ஏற்கனவே சீசன் 5ல் பங்கேற்கப்போகும் போட்டியாளர்களின் பெயர்கள் என்று ஒரு பட்டியல் உலாவிக் கொண்டிருக்கிறது. குக் வித் கோமாளி கனி, மிளா, புகழ், ரட்சிதா, பவானி ரெட்டி, சுனிதா உள்ளிட்ட விஜய் டிவி பிரபலங்களின் பெயர் அதில் இடம்பெற்றுள்ளது.