‘புதுவிதமாக நடக்கும் நாமினேஷன்’ போட்டோக்களை தீயில் போட்டு நாமினேட் செய்யும் ஹவுஸ்மேட்ஸ்!

 

‘புதுவிதமாக நடக்கும் நாமினேஷன்’ போட்டோக்களை தீயில் போட்டு நாமினேட் செய்யும் ஹவுஸ்மேட்ஸ்!

பிக் பாஸ் சீசன் 4 இன் இன்றைய நிகழ்ச்சிக்கான 2ஆவது புரோமோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 4 தற்போது விறுவிறுப்படைய தொடங்கியுள்ளது. ஆரம்பித்தில் இருந்தே சண்டை, போட்டி, அழுகை, கோபம், கேம் பிளான் என பன்முகங்களை கொண்டிருக்கும் போட்டியாளர்கள், ஆனந்த குடும்பமாக தங்களை காண்பிக்க முயற்சிக்கின்றனர். ஆனால், பிக் பாஸ் கொடுக்கும் ஒவ்வொரு டாஸ்க் மூலமாக போட்டியாளர்களின் உண்மையான முகம் வெளிப்பட்டு விடுகிறது.

‘புதுவிதமாக நடக்கும் நாமினேஷன்’ போட்டோக்களை தீயில் போட்டு நாமினேட் செய்யும் ஹவுஸ்மேட்ஸ்!

பிக் பாஸின் இந்த வார தலைவராக அர்ச்சனா தேர்வு செய்யப்பட்டிருக்கும் நிலையில், இந்த வாரத்திற்கான நாமினேஷன் புதுவிதமாக நடைபெறுவது போல புரோமோ வெளியாகியுள்ளது. வழக்கமாக, கன்பஷன் ரூமுக்குள் நாமினேஷன் நடைபெறும். ஆனால், தற்போது போட்டியாளர்கள் நாமினேட் செய்ய விரும்புபவர்களின் போட்டோக்களை தீயில் போட்டு கொளுத்த வேண்டும் என பிக் பாஸ் கூறியிருக்கிறார்.

‘புதுவிதமாக நடக்கும் நாமினேஷன்’ போட்டோக்களை தீயில் போட்டு நாமினேட் செய்யும் ஹவுஸ்மேட்ஸ்!

புரோமோவில் “ரியோ பாலா போட்டோவையும் பாலா ரியோ போட்டோவையும் தீயிலிடுகின்றனர். அதே போல ரம்யா சனத்தையும், கேபி அனிதாவையும் நாமினேட் செய்கின்றனர். கடைசியில் பாலா, தன்னை ரியோ டார்கெட் செய்வது போல இருப்பதாக கூறுவது போல புரோமோ முடிகிறது.