darbar
  • January
    28
    Tuesday

Main Area

Main



இனிமே தான் தரமான சம்பவம் இருக்கு: பிக் பாஸ் வின்னர் ஓபன் டாக்!

பிக் பாஸ்  
பிக் பாஸ்  

சென்னை: நடிகை ரித்விகா பிக் பாஸ்  மூன்றாவது சீசன் குறித்து பேட்டி அளித்துள்ளார். 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி ஆரம்பித்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 16 போட்டியாளர்கள் உள்ள இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. முதல் இரண்டு சீசன்களை போல் உலகநாயகன் கமல்ஹாசனே இந்த சீசனையும் தொகுத்து வழங்கி வருகிறார். அதனால் கண்டிப்பாக அவர் தனது அரசியல் குறித்த பேச்சையும் இதில் சேர்த்து கொள்வார் என்று எதிர்ப்பாக்கப்படுகிறது.  

bb

இந்நிலையில், பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ரித்விகா தற்போது பிரபல ஊடகத்திற்குப் பேட்டியளித்துள்ளார். அதில், ‘பிக் பாஸ் சீசன் 3 இப்போ தான் ஆரம்பமாகியிருக்கும் இன்னும் கேம் ஆரம்பமாகல. இனிமே தான் தரமான சம்பவம் நடக்கும். புரொமோ வீடியோவில் வர எதையுமே எபிசோடில் பார்க்க முடியாது. அதுவும் ஒரு மணி நேர எபிசோடை வைத்து எதையும் நம்ப முடிவு செய்ய முடியாது. உள்ளே இருந்து பார்த்தால் தான் தெரியும். பிக் பாஸ் 3 பார்க்க ரொம்பவும் ஆர்வமா இருக்கு. 

riythvika

 தற்போது உள்ள பிக் பாஸ் வீட்டில் இருக்கும் கன்ஃபெஷன் ரூம் ரொம்ப வித்தியாசமாக இருக்கு. பிக் பாஸ் வாய்ஸ், வீடு, லிவ்விங் ஏரியா போன்றவற்றை மிஸ் பண்றன்' என்று கூறியுள்ளார். 

2018 TopTamilNews. All rights reserved.