Home தமிழகம் 'முகமூடி அவிழ ஆரம்பிச்சிடுச்சு' யாரை சொல்கிறார் கமல்? - பிக் பாஸ் புரோமோ!

‘முகமூடி அவிழ ஆரம்பிச்சிடுச்சு’ யாரை சொல்கிறார் கமல்? – பிக் பாஸ் புரோமோ!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய சீசனுக்கான புரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 4ல் மக்களால் அதிகமாக பேசப்படுபவர் சுரேஷ் சக்கரவர்த்தி. தனது தடாலடி பேச்சு திறமையால் போட்டியாளர்களை அதிர வைத்து விட்டார் என்றே சொல்லலாம்.

முதன் முதலில் ஆரம்பித்த அனிதா சம்பத் உடனான ‘எச்சில் தெறிக்கும்’ சண்டை, வேல் முருகன் உடனான வேட்டி சண்டை வரை சென்றது. எல்லாவற்றுக்கும் குற்றம் கண்டுபிடித்த சுரேஷ் சக்கரவர்த்தியை எல்லாரும் எதிரியாக பார்க்க தொடங்கினர்.

ஆனால், தனது உண்மையான முகம் அதுவல்ல என ஒரே டாஸ்க்கில் காண்பித்து விட்டார் சுரேஷ். கேப்டன் டாஸ்க்கில் கேப்ரியல்லா பக்கம் யாரும் நிற்காத சூழலிலும், தனது உடல்நிலையை கூட பொருட்படுத்தாமல் நான் இருக்கிறேன் உன்னோடு என உதவிக்கரம் நீட்டிய சுரேஷ் தாத்தா மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டார். அவருடன் ஒப்பிடும் போது, மற்ற போட்டியாளர்கள் எல்லாம் நடிக்கிறார்களோ என்றும் கூட நினைக்கத் தோன்றியது.

இந்த நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான அதிரடி புரோமோ வெளியாகியுள்ளது.

அதில் கமல்ஹாசன், ‘முகத்திரை அவிழ ஆரம்பிச்சுடுச்சு.. கெட்டவர்னு சொன்னவரு இப்போ நல்லவரா மாறிட்டாரு. அப்போ, நாம நல்லவங்கன்னு நினைத்தவர்களெல்லாம்..? பார்ப்போம்” என கூறுவது போல புரோமோ முடிகிறது. இன்று யாரையெல்லாம் கமல்ஹாசன் வெளுத்து வாங்குகிறார் என பொறுத்திருந்து பார்ப்போம்.

- Advertisment -

மாவட்ட செய்திகள்

Most Popular

கோவை- சாலையோரத்தில் உறங்கியர் தலையில் கல்லைப்போட்டு கொலை

கோவை கோவையில் சாலையோரத்தில் படுத்து உறங்கியவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நவராத்திரி ஐந்தாம் நாள்: சகல ஐஸ்வரியத்தையும், புத்திரபாக்கியத்தையும் தருவாள் தேவி ஸ்கந்த மாதா!

அம்பிகையின் அருட்கொடையாய் விளங்கும் நவராத்திரி உற்சவ நாட்களில் பராசக்தியே துர்க்கையாகி தீமைகளை அழிக்கிறாள். மகாலட்சுமியாகி செல்வங்களை வாரி வழங்குகிறாள். சரஸ்வதியாகி நல்ல புத்தியையும், பக்தியையும் அளிக்கின்றாள். புத்தி, பக்தி, சித்தி...

தர்மபுரி: ’’ஒகேனக்கல் சுற்றுலா தளத்தை மேம்படுத்த ஜப்பான் தூதரகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது’’-எம்.பி. செந்தில்குமார் பேட்டி

உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத்தலமான ஒகேனக்கல் பகுதியை மேம்படுத்தாமல் மாவட்ட நிர்வாகம் அலட்சியமாக இருக்கிறது. நிச்சயமா ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் ஒகேனக்கல் சர்வதேச சுற்றுலா தளமாக மாற்றம் செய்யப்படும்.ஒகேனக்கல் சுற்றுலா தளத்தை...

வலை விரிக்கும் அரசியல் கட்சிகளுக்கு வடிவேலு “டாடா பை..பை..”

தமிழகத்தில் கடந்த 2011- ம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில்தான் அதிக பட்சமாக நடிகர், நடிகையர் பிரசாரத்தில் ஈடுபட்டனர். நடிகர்கள் ராமராஜன், நெப்போலியன், வாகை சந்திரசேகர், வடிவேலு, சிங்கமுத்து, குண்டு கல்யாணம்,...
Do NOT follow this link or you will be banned from the site!