Home சினிமா ’உங்களைப் பார்க்க மட்டும்தான் வந்தேன்’ ஷனம் சொன்னது யாரிடம்? பிக்பாஸ் 100-ம் நாள்

’உங்களைப் பார்க்க மட்டும்தான் வந்தேன்’ ஷனம் சொன்னது யாரிடம்? பிக்பாஸ் 100-ம் நாள்

பிக்பாஸ் இந்த வாரம் கொண்டாட்டம் ஸ்பெஷலாகவே முடிந்துவிடும் என நினைக்கிறேன். ஏனெனில், தினந்தோறும் ஏற்கெனவே வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள் சிறப்பு விருந்தினராக வந்து சர்ப்பரைஸ் கொடுத்து இறுதிப்போட்டியில் இருக்கும் போட்டியாளர்களை உற்சாகப் படுத்தி வருகிறார்கள். நேற்றைய எப்பிசோட்டும் அப்படித்தான் இருந்தது.

பிக்பாஸ் 100-ம் நாள்

வேக்கப் ஸாங்குக்கு ஆட நேற்று நிறைய கூட்டம். அர்ச்சனா அண்ட் கோ மீண்டும் சேர்ந்து ஆடியது. ரம்யாவுக்கு ஷிவானி ஜோடியாக இல்லாததால் சோலாவாக ஆட விரும்பாது கையைக் காலை ஆட்டிக்கொண்டிருந்தார்.

ஆஜித், சுசித்ரா, சம்யுக்தா, ஷனம் என வரிசையாக ஏற்கெனவே எவிக்‌ஷன் ஆன ஆட்கள் ஒவ்வொருவராக வந்துகொண்டிருந்தார்கள். சர்ப்பரைஸ் என்பதன் அர்த்தமே மாறி, ‘சரி… சரி வா’ என்பதாகி விட்டது. ஆனால், யார் வருகை யாரை மகிழ்ச்சிப்படுத்தியது என்பதை வைத்து குருப்பிஸத்தை யூகிக்கலாம்.

அர்ச்சனா, நிஷா, ரமேஷ் வந்தபோது ரியோ, கேபி, சோம் மூவரும் மகிழ்ந்தனர். ஷனம் வந்தபோது ஆரி சந்தோஷப்பட்டார். அவரிடம் சென்று ‘உங்களைப் பார்க்க மட்டும்தான் உள்ளே வந்தேன்’ என்று சொல்லி வைத்தார். ஆரி ஆர்மியின் பவர்.

சம்யுக்தா, ஆஜித் வந்தபோது ரம்யா ஹேப்பியானார். சுசித்ரா, சம்யுக்தா வந்தபோது பாலா உற்சாகமானார். ரேகா வந்தபோது யாரின் ஆதரவும் இல்லை; எதிர்ப்பும் இல்லை. ’மாஸா இருக்க’ என்று ரம்யாவை உசுப்பேத்தினார் சம்யுக்தா. வெளியே ரம்யாவை ஆரி ஆர்மி வெச்சு செய்வதைச் சொல்லாமல். ’நானும்கூட சிங்கப்பெண் என்று சொன்னனே’ என ரேகாவும் சேர்ந்துகொண்டார். ஆரி ஆர்மிக்கு இன்னிக்கு டபுள் ஷிப்ட் வொர்க்.

எல்லோரையும் சோபாவின் உட்கார வைத்து மாயாண்டி குடும்பத்தினர் மணிவண்ணன் போல கண்ணீர் வடிக்க பேசிக்கொண்டிருந்தார் பிக்கி. ‘உங்களை யெல்லாம் நான் வீட்டுக்குள் இருக்கும்போதுதான் பார்க்க முடியும்’ என செண்டிமெண்ட்டை பிழிந்தார். அதன்பின், இதுவரை வீட்டில் நடந்த ஹியுமர் காட்சிகளைத் தொகுத்து ஒரு வீடியோவாக ஒளிப்பரப்பினார். நிஜமாகவே அசத்தலாக இருந்தது.

அந்த ஹியுமர் வீடியோவில் அர்ச்சனா, நிஷா, ரியோ, ரம்யா உள்ளிட்ட சிலரே இடம்பெற்றனர். ஆரி, பாலா நடந்துபோனதை ரிவர்ஸில் போட்டு அதையும் ஹியுமர் கணக்கில் சேர்த்திருந்தார் பிக்கி. அந்தளவுக்குத்தான் பாலாவும் ஆரியும் வீட்டில் ஹியுமர் கண்டண்ட் கொடுத்தது. எல்லோரும் உற்சாகமாகக் கைத்தட்டி ரசித்தனர்.

சொந்த கதை டாஸ்கில் தான் சரியாகப் பேச வில்லை என ரேகா முன் வந்து தன் அப்பா மரணம் பற்றிப் பேசி அழுதார். அடுத்து ஒவ்வொருவரும் வீட்டில் நடந்த ஹியுமர் சம்பவங்களைச் சொல்ல சொன்னார் பிக்கி. நிஷூ எனச் செல்லமாக நிஷாவை அழைத்து ஷாக் கொடுத்தார். அதுக்கே உற்சாகம் பொங்கிய நிஷாவிடம் ‘ஐ லவ் யூ’ என்று சொன்னதும் மண்ணில் உருண்டு புரண்டு கொண்டாடினார். ஆனால், எல்லாம் முடிந்து ஆசுவாசப்படுத்திக்கொண்டிருந்தபோது ‘எப்படி இருந்தது காமெடி’ எனக் கேட்டதும், மற்றவர்கள் கொண்டாடி தீர்த்தனர். ஆயிரம் குறைகள் சொன்னாலும் நிஷா, அர்ச்சனா குரூப் இருக்கும்போதுதான் கொஞ்சமாவது சிரிக்கிற மாதிரி காட்சிகள் இருந்தன.

தங்க சுரங்கம் டாஸ்க்கை மீண்டும் வைத்தார் பிக்கி. கடைசி நேரத்தில் புதுசா எல்லாம் யோசிக்க முடியாது என பிக்பாஸ் டீம் கையை விரித்துவிட்டார்கள் போல. மண்ணைத் தோண்டி துண்டு சீட்டுகளாக எடுத்து வந்து, ஜிலேபி, பானிபூரி, கமர்கட் என படிக்க உற்சாகமாக கைத்தட்டி மகிழ்ந்தனர் ஹவுஸ்மேட்ஸ்.

இதையெல்லாம் வைத்து எப்படி ஓட்டு போடுவாங்க ரசிகர்கள் என்ற கேள்வியும் எழாமல் இல்லை. அநேகமாக பொங்கல் கொண்டாட்டம் எல்லாம் இந்தக் கும்பலோடுதான் என்று தோன்றுகிறது.

மாவட்ட செய்திகள்

Most Popular

விவசாயிகள், தொழிலாளர்கள் இந்திய குடியரசின் பலம்… விவசாயிகளின் போராட்டத்துக்கு காங்கிரஸ் ஆதரவு..

விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள்தான் இந்திய குடியரசின் பலம் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. வேளாண் சட்டங்களை எதிர்த்தும் அவற்றை ரத்து செய்யக்கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள...

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ்-இடதுசாரிகள் தீவிரம்… முதல் கட்டமாக 77 தொகுதிகளுக்கு உடன்பாடு..

மேற்கு வங்கத்தில் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற 77 தொகுதிகளிலும் மீண்டும் போட்டியிட காங்கிரஸ்-இடதுசாரிகள் இடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் 294 உறுப்பினர்களை...

கங்கனாவை சந்திக்க நேரம் இருக்கு.. விவசாயிகளை சந்திக்க அவருக்கு நேரமில்லை.. கவர்னரை தாக்கிய சரத் பவார்

கங்கனாவை சந்திக்க நேரம் இருக்கு, ஆனால் விவசாயிகளை சந்திக்க அவருக்கு நேரமில்லை என்று மகாராஷ்டிரா கவர்னர் பகத் சிங் கோஷ்யாரியை சரத் பவார் விமர்சனம் செய்தார்.

குவிந்தது வர்த்தக ஒப்பந்தம்… எல் அண்டு டி நிறுவனத்துக்கு ரூ.2,467 கோடி லாபம்…

2020 டிசம்பர் காலாண்டில் எல் அண்டு டி நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் லாபமாக ரூ.2,467 கோடி ஈட்டியுள்ளது. அடிப்படை கட்டமைப்பு துறையில் மிகப்பெரிய நிறுவனமான...
Do NOT follow this link or you will be banned from the site!