darbar
  • January
    21
    Tuesday

Main Area

Main



சிம்புவின் மாநாடு படத்தில் இணைந்த பிக் பாஸ் பிரபலம்!

சிம்பு
சிம்பு

சென்னை: நடிகர் சிம்புவின் மாநாடு படத்தில் பிக் பாஸ் சீசன் 3யின் போட்டியாளர் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

சிம்பு- வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகவுள்ள திரைப்படம் மாநாடு. முழுக்க முழுக்க அரசியல் கலந்த இந்த படத்திற்காகச் சிம்பு வெளிநாட்டுக்குச் சென்று தனது உடம்பை குறைத்துள்ளார். மேலும் இந்த மாத இறுதியில் படத்தின் ஷூட்டிங் மலேசியாவில் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையில் சமீபத்தில் இந்த படத்தின் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா பணியாற்றவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது பிக் பாஸ் போட்டியாளர் டேனியல் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி இதில் அவர் சிம்புவின் நண்பராக நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. 
 

daniel

மேலும் டேனியல் பிக் பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண் நடித்து வரும் 'தனுசு ராசி நேயர்களே' படத்திலும் இணைந்து நடித்துவருவது குறிப்பிடத்தக்கது. 
 

2018 TopTamilNews. All rights reserved.