பிக் பாஸ் வீட்டின் இந்த வாரம் கேப்டன் இவங்க தான்!

 

பிக் பாஸ் வீட்டின் இந்த வாரம் கேப்டன் இவங்க தான்!

பிக் பாஸ் சீசன் 4ன் இன்றைய நிகழ்ச்சியில் கேப்டன் டாஸ்க் நடைபெறுவது போலவும், அதில் அனிதா வெற்றி பெறுவது போலவும் புரோமோ வெளியாகியுள்ளது.

கடந்த பிக்பாஸ் சீசன்களுடன் ஒப்பிடும் போது, இந்த சீசன் சுவாரஸ்யமாக இல்லை என்றே சொல்லலாம். இதுவரை இல்லாதது போல, பல டாஸ்க்குகள் மூலம் இந்த சீசனில் பிக் பாஸ் கொளுத்தி போட்டுக் கொண்டே இருந்தார். அதற்கு ஒரு சிலர் ரியாக்ட் செய்தாலும், பலர் அன்பு என்ற சொல்லுக்கு அடங்கி தனித்துவத்தை வெளிப்படுத்த மறந்து விட்டனர். அதற்கு ஒரே ஒரு டாஸ்க் மூலம் செக் வைத்தார் பிக் பாஸ்.

பிக் பாஸ் வீட்டின் இந்த வாரம் கேப்டன் இவங்க தான்!

கடந்த 60 நாட்களில், மக்களுக்காக நீங்க என்ன செய்து இருக்கீங்க? என ஒவ்வொருவரையும் தனியாக அழைத்துக் கேட்க ரம்யா பாண்டியன், ஷிவானி உள்ளிட்டோர் நாங்க எதுவுமே பண்ணல பிக் பாஸ் என காலில் விழுந்து விட்டனர். அதன் பிறகு, வந்தவர்களையும் பதில் சொல்ல விடாமல் வெளுத்து வாங்கி விட்டார் பிக் பாஸ். தனியா கூட்டிட்டு போய் இப்படி வச்சு செஞ்சுட்டாரே! என ஹவுஸ்மேட்ஸ் ஆங்காங்கே குமுறிக் கொண்டிருந்தனர். இதன் தொடர்ச்சியாக, நேற்று சனம் ஷெட்டி பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டார். அவர் வெளியே சென்றது நியாயமே இல்லை என ஹவுஸ்மேட்ஸ் சிலர் கூறிக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில், இன்றைய நிகழிச்சில் கேப்டன்சி டாஸ்க் நடைபெறுவது போல முதல் புரோமோ வெளியாகியுள்ளது. புரோமோவில், ஹவுஸ்மேட்ஸ் எல்லாரையும் கேப்டன் போட்டியில் களமிறக்குவதாக பிக் பாஸ் ஒரு புது அறிவிப்பை வெளியிடுகிறார். பிக் பாஸ் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதில் சொல்பவர்களே இந்த வார கேப்டன் என்பது தான் அந்த டாஸ்க். போட்டியின் இறுதியில் நிஷாவும், அனிதாவும் போட்டியிட அனிதா கேப்டன் வாய்ப்பை தட்டிச் செல்வது போலவும், பாலா அவரை கட்டியணைத்து வாழ்த்துக்கள் சொல்வது போலவும் புரோமோ முடிகிறது.