Home சினிமா பிக் பாஸ் வீட்டுக்குள் ரீ எண்ட்ரி கொடுத்த அர்ச்சனா, நிஷா! - நிகழ்ச்சியை கலகலப்பாக்குவார்களா?

பிக் பாஸ் வீட்டுக்குள் ரீ எண்ட்ரி கொடுத்த அர்ச்சனா, நிஷா! – நிகழ்ச்சியை கலகலப்பாக்குவார்களா?

திங்கட்கிழமை எப்பிசோட். வழக்கமாக வீட்டுக்குள் இருப்பவர்களுக்கு ஒரு டென்ஷன் ஒட்டிக்கொள்ளும் நாள். காரணம், சகப் போட்டியாளர்களை எவிக்‌ஷனுக்கு நாமினேஷன் செய்ய வேண்டிய நாள். இது இறுதி வாரம் என்பதால் எல்லோருமே வாக்குக் கேட்கும் பட்டியலில் இருக்கிறார்கள். எனவே, இந்த வாரம் அந்த டென்ஷனலிருந்து விடுதலை. இன்னும் ஸ்பெஷலாக வீட்டுக்கு சில விருந்தினர்களும் வந்திருக்கிறார்கள். அதனால் வீடே களை கட்டியிருக்கிறது. அது குறித்துக் கட்டுரையில் பார்ப்போம்.

பிக்பாஸ் 99-ம் நாள்

வேக்கப் ஸாங் முடிந்து உற்சாகமாகவே எல்லோரும் ஆங்காங்கே திரிந்துகொண்டிருந்தார்கள். எல்லோரையும் சோபாவில் உட்கார வைத்து, ‘இந்த 100 நாட்களில் நெகிழ்ச்சியான, உங்களை வெளிப்பத்திக்கொண்ட, பெருமிதமான தருணங்களைப் பகிருமாறு பிக்கி கேட்டுக்கொண்டார். இந்த சீசன் முழுக்க பேசும் டாஸ்க்குகள் தான் அதிகம் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

எல்லோரும் எதிர்பார்த்ததுபோல ஆரிதான் முதல் எழுந்தார். ராம் வாக்கில் அவர் முதலிடம் வந்தது மகிழ்ச்சியாக இருந்தது என்றார். மகள் வந்தது உள்பட சில விஷயங்கள் சொன்னார். ஆனால், நிஜமாக வீட்டின் மகிழ்ச்சிக்கு தான் காரணமான ஓரிடத்தைச் சொல்ல அவரிடம் சம்பவங்கள் இல்லை. குறை கண்டுபிடித்து சொல்கிறார்… பேசுகிறார்… சண்டை போடுகிறார்… ஆனால், பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் அதற்கான அம்சங்கள் அவர் வெளிப்படுத்தவே இல்லை.

பாலா இப்போதெல்லாம் ஆரியின் பாணியைப் பின்பற்றத் தொடங்கிவிட்டார். ஆமாம். ஒவ்வொரு கேமராவாக நின்று அழுவது போன்ற குரலில் மக்களுக்கு நன்றி சொல்லிக்கொள்வதைத்தான் சொல்கிறேன். அதேபோல வந்து பாலா தனக்கு நெகிழ்ச்சியான தருணங்களைச் சொன்னார். அதில் ஷிவானி மற்றும் ரம்யா கயிற்றைப் பிடித்துக்கொண்டு நீண்ட நேரம் நின்றதைச் சொன்னார்.

டான்ஸ் ஆடியதையும் நிகழ்ச்சி ஹோஸ்ட் பண்ண வாய்ப்பு தந்த்து பற்றியும் இன்னும் சில சம்பவங்களைச் சொன்னார் கேபி. கமல்ஹாசன் ஒரு எப்பிசோட்டில் நன்றி சொன்னதை நெகிழ்வோடு நினைவு கூர்ந்தார் ரியோ. எவிக்‌ஷன் ப்ரி பாஸ் விட்டுக்கொடுத்தது பற்றி ரம்யா சொன்னது இயல்பாக இருந்தது. அதற்கு கிடைத்த பாராட்டுகள் ஆச்சர்யமாக இருந்ததையும் சொன்னார். அதை வெளியே ஹவுஸ்மேட்ஸ் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது தெரியாது.

ஓர் இடைவெளிக்குப் பிறகு வீட்டின் திரைகள் இறக்கப்பட்டன. அர்ச்சனா, நிஷா, ரேகா, ரமேஷ் ஆகியோர் வீட்டுக்குள் அனுப்பப்பட்டனர். அவர்களைப் பார்த்ததும் உற்சாகத்தில் ஓடி வந்து கட்டியணைத்துக் கொண்டனர். நிஷாவுக்கு ஆரி மீது எந்த நல்ல அபிப்பிராயமும் இல்லை என்றாலும் வெளியே ஆரிக்கான ஆதரவைப் பார்த்து அவருடன் அதிக நேரம் செலவிட்டார்.

அர்ச்சனா எல்லோரிடம் ஒரு மாதிரி சில க்ளூக்களைக் கொடுத்து வந்தார். எல்லோரும் ஓடிச் சென்று அர்ச்சனாவைக் கட்டிக்கொள்ள, ‘நானும் இருக்கேண்டா’ என்பதுபோல ரேகா பார்த்துக்கொண்டிருந்தார். ஜித்தன் ரமேஷ் தனது ஓய்வெடுக்கும் ஸ்டைலில் போய் படுத்துக்கொண்டார்.

ரியோ தனது அக்கா செண்டிமெண்ட்டை ரினிவல் செய்துகொண்டு அழுது தீர்த்தார். ‘சண்டை எல்லாம் ஸ்கிரிப்டா… சாப்பாடு எல்லாம் வெளியே இருந்து வருமாமே… டிரஸ் எல்லாம் அயர்ன் பண்ணி தருவாங்களாமே’ என வெளியே கேட்கிறாங்க என்று நிஷா சொன்னதும், யார் சொன்னது காட்டுங்க என்று சண்டைக்கு வந்தார் ரம்யா.

’அச்சு, அப்படியே வெளியே வந்தீங்கன்னா, லெஃப்ட் சைட் கன்ஃபெக்‌ஷன் ரூம் இருக்கும். அங்கே வாங்க’ என அர்ச்சனாவை கலாய்த்தார் பிக்கி. அப்பறம் எல்லோருக்கும் ஒரு டாஸ்க் கொடுத்தார். மாவை ஒரு அட்டையின் மூலம் வாயால் எடுத்து மற்றவர்க்கு அப்படியே கொடுத்து கடைசியில் இன்னொரு பவுலில் சேர்க்க வேண்டும். பெண்கள் அணி ஜாலியாகச் செய்ய, ஆரி டீம் இதிலும் கண்ணும் கருத்துமாகச் செய்து வென்றது. ஆனால், ஆடியன்ஸ்க்கு எண்டர்டெயின்மெண்ட் கொடுத்தது பெண்கள் டீம்தான்.

நிஷா தலையில் கேபி மாவைக் கொட்ட ‘நிஷா, இப்போ நீங்க நல்லா இருக்கீங்க’ என்று கமெண்டினார் பிக்கி. செல்லமாகக் கோபித்துக்கொண்டார் நிஷா. வியாழக்கிழமை வரை இவர்கள் எல்லாம் பிக்பாஸ் வீட்டில்தான் இருப்பார்கள் என்று தெரிகிறது. கொஞ்சம் ஜாலியாக எப்பிசோட்டுகளை எடுத்துச் செல்லுங்கள் மக்களே!

மாவட்ட செய்திகள்

Most Popular

27-1-2021 தினப்பலன் – ஐந்து ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் மோதல் போக்கு நிலவும்!

சார்வரி வருடம் I தை 14 I புதன் கிழமை I ஜனவரி 27, 2021 இன்றைய ராசி பலன்!

லாக்டவுனில் இந்திய கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு 35 சதவீதம் அதிகரிப்பு.. 14 கோடி ஏழைகளுக்கு ரூ.1 லட்சம் வழங்கலாம்

கொரோனா வைரஸ் காரணமாக அமல்படுத்தப்பட்ட லாக்டவுன் காலத்தில் அம்பானி உள்ளிட்ட இந்திய கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு ரூ.12.97 லட்சம் கோடி அதிகரித்துள்ளது. இதனை பிரித்து 14 கோடி ஏழைகளுக்கு தலா...

விவசாயிகள், தொழிலாளர்கள் இந்திய குடியரசின் பலம்… விவசாயிகளின் போராட்டத்துக்கு காங்கிரஸ் ஆதரவு..

விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள்தான் இந்திய குடியரசின் பலம் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. வேளாண் சட்டங்களை எதிர்த்தும் அவற்றை ரத்து செய்யக்கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள...

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ்-இடதுசாரிகள் தீவிரம்… முதல் கட்டமாக 77 தொகுதிகளுக்கு உடன்பாடு..

மேற்கு வங்கத்தில் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற 77 தொகுதிகளிலும் மீண்டும் போட்டியிட காங்கிரஸ்-இடதுசாரிகள் இடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் 294 உறுப்பினர்களை...
Do NOT follow this link or you will be banned from the site!