பிக் பாஸ் வீட்டுக்குள் எண்ட்ரி கொடுத்த விஜே அர்ச்சனா

 

பிக் பாஸ் வீட்டுக்குள் எண்ட்ரி கொடுத்த விஜே அர்ச்சனா

பிக் பாஸ் சீசன் 4 இன்றைய நிகழ்ச்சியில் முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளனர். இதுவரை 10 நாட்கள் முடிந்துள்ள நிலையில் சண்டை, கோபம், வெறுப்பு என பலதரப்பட்ட எமோஷன்களை ஹவுஸ்மேட்ஸ் காட்டி வருகின்றனர்.

பிக் பாஸ் வீட்டுக்குள் எண்ட்ரி கொடுத்த விஜே அர்ச்சனா

இருந்தாலும் ஆட்டம் இன்னும் சூடுபிடிக்கவில்லை என்பதே ரசிகர்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது.

இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோவில், தீமை தான் வெல்லும் எவன் நினைத்தாலும் பாடலுடன் விஜே அர்ச்சனா பிக் பாஸ் வீட்டுக்குள் அடியெடுத்து வைத்துள்ளார். அவரை கண்ட ஹவுஸ்மேட்ஸ் சந்தோஷத்தில் ஓடி சென்று கட்டியணைக்கின்றனர்.

பிக் பாஸ் வீட்டுக்குள் எண்ட்ரி கொடுத்த விஜே அர்ச்சனா

அப்போது ஷனம் எல்லாம் ஓகேவா என்று வெளியுலகை பற்றி கேட்க,இன்னும் கொஞ்ச நேரத்துல தெரிஞ்சிடும் என்று அர்ச்சனா சிரித்தப்படி கூறுகிறார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிரபலமாக வலம் வந்த அர்ச்சனா பல சண்டை, பஞ்சாயத்திற்கு பிறகு பிக் பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளார்.