“ரியோ…ரியோ ராஜ்” ஹஸ்கி வாய்ஸில் கலாய்த்த பிக் பாஸ்

 

“ரியோ…ரியோ ராஜ்” ஹஸ்கி வாய்ஸில் கலாய்த்த பிக் பாஸ்

இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து 93 நாட்கள் ஆகின்றன. இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ், சுசித்ரா, சம்யுக்தா, நிஷா, ரமேஷ், அர்ச்சனா, ஆஜித், அனிதா என பலரும் போட்டியிலிருந்து வெளியேறிய நிலையில் ரியோ, பாலா, ஆரி, சோம், கேபி, ரம்யா, ஷிவானி ஆகியோர் போட்டியில் உள்ளனர்.

“ரியோ…ரியோ ராஜ்” ஹஸ்கி வாய்ஸில் கலாய்த்த பிக் பாஸ்

இந்த வாரம் டிக்கெட் டூ பினாலே டாஸ்கில் அனைத்து போட்டிகளிலும் அதிக மதிப்பெண் எடுத்து வெற்றி பெறும் நபர் டிக்கெட் டூ பினாலே மூலம் எவிக்ஷனிலிருந்து காப்பாற்றப்பட்டு நேரடியாக இறுதி போட்டிக்கு செல்வார் என்று அறிவிப்பு வெளியானது. நேற்றைய நிகழ்ச்சியில் 2 போட்டிகள் நடந்து முடிய அதில் ரியோ லீடிங்கில் உள்ளார்.

இந்நிலையில் இன்று வெளியாகிய முதல் ப்ரோமோவில் தூங்கி கொண்டிருந்த ரியோவை பிக் பாஸ் ஹஸ்கி வாய்ஸில், ரியோ…ரியோ ராஜ் கன்ஃபக்ஷன் ரூமுக்கு வாங்க என்று சொல்கிறார். இதையடுத்து பாடல் ஒன்றின் பல்லவி ஒலிக்கப்பட அந்த பாடலை ஹவுஸ்மேட்ஸ் பாட வேண்டும் என்ற கேமில் ஷிவானி ஒரு பாடல் பாடி வெற்றி பெற அடுத்த பாடலுக்கு போட்டியாளர்கள் மத்தியில் வழக்கம் போல சண்டை ஏற்படுவது போல ப்ரோமோ வீடியோ முடிகிறது.