‘சோம் சேகருக்கு மனைவியாகும் ரம்யா பாண்டியன்’ : டாஸ்க்கில் நடந்த டுவிஸ்ட்!

 

‘சோம் சேகருக்கு மனைவியாகும் ரம்யா பாண்டியன்’ : டாஸ்க்கில் நடந்த டுவிஸ்ட்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

‘சோம் சேகருக்கு மனைவியாகும் ரம்யா பாண்டியன்’ : டாஸ்க்கில் நடந்த டுவிஸ்ட்!

பிக் பாஸ் வீட்டில் தற்போது 15 போட்டியாளர்கள் உள்ளனர். இந்த வாரம் தீபாவளி பண்டிகையையொட்டி எவிக்ஷன் ப்ராசஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. அத்துடன் முந்தைய ப்ரோமோவில் பாட்டி சொல்லை தட்டாதே என்ற டாஸ்க் கொடுக்கப்படுகிறது. இதில் பாட்டியாக அர்ச்சனா இருக்க, அவரது பிள்ளைகள் சொத்துக்காக அவரை பார்க்க வருவது போல டாஸ்க் கொடுக்கப்படுகிறது. இதில் அர்ச்சனா வைத்துள்ள சொத்து பத்திரங்களை திருடி செல்லக்கூடிய வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், சோம் பாட்டியின் இளைய மகனாகவும், ரம்யா மருமகளாகவும் உள்ளனர். இவர்களுடன் கேபி மகளாக நடித்து பாட்டியின் சொத்துக்களை திருட வேண்டும் என்று மூவருக்கும் சீக்ரெட் டாஸ்க் கொடுக்கப்படுகிறது. இதில் சொத்து பத்திரங்களை நாங்கள் மூன்று பேரும் மாற்றி மாற்றி பார்த்துக்கொள்கிறோம் என பிக் சோம் அர்ச்சனாவிடம் கூறுவது போல ப்ரோமோ வீடியோ முடிகிறது.