‘கால் சென்டர் டாஸ்க்கால் பிரிந்த உறவுகள்’ : சமாதான புறாவை பறக்கவிடும் ஷனம்

 

‘கால் சென்டர் டாஸ்க்கால் பிரிந்த  உறவுகள்’ : சமாதான புறாவை பறக்கவிடும் ஷனம்

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

‘கால் சென்டர் டாஸ்க்கால் பிரிந்த  உறவுகள்’ : சமாதான புறாவை பறக்கவிடும் ஷனம்

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து 54 நாட்கள் ஆகின்றன. இந்த வாரம் நாமினேஷனில் நிஷா, சம்யுக்தா, ஆரி, பாலா, ஷனம், ரமேஷ், சோம் உள்ளிட்டோர் உள்ளனர். கடந்த 2 நாட்களாக பிக் பாஸ் வீட்டில், பிபி கால் சென்டர் டாஸ்க் வழங்கப்பட்டு வருகிறது. இதில் சுவாரஸ்யமும், சண்டை சச்சரவுகளும் நடைபெற்று வந்தன.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள முதல் ப்ரோமோவில் ஷனம், இந்த போன் டாஸ்க்கில் எல்லார்குள்ளேயும் என்ன இருந்துச்சிச்சோ அது எல்லாமே பிரேக் ஆகிடுச்சு. முகத்தை பார்த்து என்னால குட் மார்னிங் கூட சொல்ல முடியல. அந்த அளவுக்கு நெகட்டிவிட்டி இங்க இருக்கு. அப்படியே பிரிஞ்சிடுச்சி என்று ரியோ, அர்ச்சனாவிடம் சொல்ல, அதற்கு ரியோ, நெறைய எஃபர்ட் போட்டாச்சு. என்னால முடியல என்று சொல்ல. அதற்கு அர்ச்சனா நான் 30 நாட்களாக போட்ட எஃபர்ட் நேற்றுமுன்தினம் தெரிஞ்சிடுச்சி என்று கூறுகிறார். அதற்கு ஷனம், இதுக்கு பிறகும் ஒபினியன் வரும். இது எண்ட் பாயிண்ட்னு நெனைச்சிங்கனா என்று கூற. அதற்கு ரியோ, உங்க எஃபர்ட்க்கு நன்றி ஷனம். எனக்கு சுத்தமா இன்ட்ரஸ்ட் இல்ல என்று கூறும் படியாக ப்ரோமோ வீடியோ முடிகிறது.