நாமினேஷனை மாற்றி அமைக்கும் டுவிஸ்ட் : வெல்ல போவது யார்?

 

நாமினேஷனை மாற்றி அமைக்கும் டுவிஸ்ட் : வெல்ல போவது யார்?

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான இரண்டாவது ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

நாமினேஷனை மாற்றி அமைக்கும் டுவிஸ்ட் : வெல்ல போவது யார்?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் 51வது நாளில் 14 போட்டியாளர்கள் வீட்டில் உள்ளனர். இதுவரை ரேகா, வேல் முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி, சுசித்ரா ஆகியோர் வெளியேறியுள்ளனர். இந்த சூழலில் இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் சோம், ஆரி, பாலா, ரமேஷ், அனிதா, ஷனம், நிஷா ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.

இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது ப்ரோமோவில், பிக் பாஸ் வரலாற்றில் முதல்முறையாக நாமினேஷனை மாற்றி அமைக்கும் சக்தி, நாமினேஷன் டாப்பில் கார்டு என்ற ஸ்பெஷல் பவர் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதில் கடந்த முறை ஆஜித் எவிக்ஷன் ப்ரீ பாஸ் வாங்கியது போல குழுவாக அமர்ந்து பேசுகின்றனர்.

நாமினேஷனை மாற்றி அமைக்கும் டுவிஸ்ட் : வெல்ல போவது யார்?

அதில் ஷனத்திற்கு விட்டு கொடுக்க தயாரா என்று ஆரி கேட்க, அனிதா, நிஷா என்னால் விட்டு தர முடியாது என விடா பிடியாக நிற்க, ஷனமும் நானும் இதற்கு தகுதியானவள் தான் என்று கூறுகிறார். இந்த நாமினேஷன் டாப்பில் கார்ட்டை பெறும் நபர் அவருக்கு பதிலாக ஒருவரை நாமினேட் செய்யும் சக்தியை பெறலாம் என்று பிக் பாஸ் சொல்ல, நிஷா ஆஜித்தையும், பாலா அர்ச்சனாவையும் நாமினேட் செய்கின்றனர் இப்படியாக ப்ரோமோ வீடியோ முடிகிறது.