“ஒரு எபிசோடுல ரம்யாவை அப்படியே தூக்கிட்ட ” ரியோ மனைவியின் கம்ப்ளைண்ட்!!

 

“ஒரு எபிசோடுல ரம்யாவை அப்படியே தூக்கிட்ட ” ரியோ மனைவியின் கம்ப்ளைண்ட்!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

“ஒரு எபிசோடுல ரம்யாவை அப்படியே தூக்கிட்ட ” ரியோ மனைவியின் கம்ப்ளைண்ட்!!

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் தற்போது ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது. நேற்று ஷிவானியின் அம்மா உள்ளேபாலாவின் அண்ணன் ரமேஷ் ஜாலியாக அரட்டை அடித்து விட்டு சென்றார்.உள்ளே வந்து பேசியது ஹவுஸ்மேட்ஸை கூட ஆட்டம் காண வைத்தது. ஒருபுறம் பாலாஜி குற்ற உணர்ச்சியில் திக்குமுக்காடி கொண்டிருந்தார். அவருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அவரின் அண்ணன் ரமேஷ் வந்திருந்தார்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில், ரியோவின் மனைவி ஸ்ருதி வருகை தந்துள்ளார். காதலே காதலே என்ற பாடலுடன் வரும் ஸ்ருதியை ரியோ கட்டியணைத்து அழுகிறார். அப்போது ஸ்ருதி நண்பர்களின் கடுப்பு, நீ ரம்யாவை ஒரு எபிசோடில் அப்படியே தூக்கிட்டியாமே என்று சொல்ல, அது நண்பர்கள் கடுப்பா? இல்ல உன் கடுப்பா என்று ஜாலியாக கேட்கும் படி ப்ரோமோ வீடியோ முடிகிறது. அதேபோல் இன்று வெளியான முதல் ப்ரோமோவில் ரம்யாவின் அம்மா பிக் பாஸ் வீட்டுக்குள் வருகை புரிந்தது குறிப்பிடத்தக்கது.