ஷிவானி – பாலாவை போட்டு கொடுக்கும் கேபி : கமலின் கியூட் ரியாக்ஷன்!

 

ஷிவானி – பாலாவை போட்டு கொடுக்கும் கேபி : கமலின் கியூட் ரியாக்ஷன்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டின்தலை தீபாவளி என்பதால் எலிமினேஷன் ப்ராசஸ் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வாரம் முழுவதும் தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இருப்பினும் பிக் பாஸ் வீட்டுக்குள் தனித்தனி குரூப்பாக உள்ள ஹவுஸ்மேட்ஸுக்குள் சில சண்டைகளும் ஏற்பட்டு வந்தது.

ஷிவானி – பாலாவை போட்டு கொடுக்கும் கேபி : கமலின் கியூட் ரியாக்ஷன்!

அந்த வகையில் ‘பாட்டி சொல்லை தட்டாதே’ டாஸ்கில் சோம் சேகரிடமிருந்து பாலா பத்திரத்தை திருடினார். இதுகுறித்து பாலாவுக்கும் -கேபிக்கும் இடையே விவாதம் ஏற்பட்டது . அதில் கேபி ஹானஸ்ட்டாக பதில் சொல்லு பாலா என்று கூறினார். அதற்கு பாலாவும் பதில் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். இதன்பிறகு ஷிவானி – சுசித்ரா இணைந்து நீ ஹானஸ்ட் இல்லாதவன் ; ஹானஸ்ட்டாக விளையாடமாட்டுற என்று கேபி கூறியதாக கூறினார். இதனால் பாலா வீட்டுக்குள் மீண்டும் வந்து கேபியிடம் தகராறில் ஈடுபட்டார்.

இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில், பாலா திருடனத நான் பார்த்துட்டேன். அதனால ஹானஸ்ட்டா சொல்லு பாலா அப்படினு சொன்ன, அவனும் அதுக்கு பதில் சொல்லிட்டு போயிட்டான். வெளியே போய்ட்டு உள்ளே வந்தான் என்று சொன்னதும் கமல் குறுக்கிட்டு வெளியே என்ன நடந்துச்சு? என்று கேட்கிறார்.

ஷிவானி – பாலாவை போட்டு கொடுக்கும் கேபி : கமலின் கியூட் ரியாக்ஷன்!

அதற்கு கேபி, அது எனக்கு தெரியல சார் என்று சொல்ல. உடனே கமல் எனக்கு தெரியுமே என்று சொல்லி, சம்மந்தப்பட்டவங்களே சொன்னா நல்லா இருக்கும் என்று சொல்லும் படியாக ப்ரோமோ முடிகிறது.