சுரேஷுக்கு எதிராக மாறிய பாலா : புலம்பும் ஹவுஸ்மேட்ஸ்!

 

சுரேஷுக்கு எதிராக மாறிய பாலா : புலம்பும்  ஹவுஸ்மேட்ஸ்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

சுரேஷுக்கு எதிராக மாறிய பாலா : புலம்பும்  ஹவுஸ்மேட்ஸ்!

பிக் பாஸ் நிகழ்ச்சி பரபரப்புக்கும் சண்டைக்கும் பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. கடந்த வாரம் வேல்முருகன் வெளியேறிய நிலையில் சுசித்ரா பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்திருப்பது மேலும் கலவரத்தை கூட்டியுள்ளது.ஆரி கடந்த வாரம் முதல் நியாயத்திற்காக குரல் கொடுத்து வருகிறார். அதேபோல் ஷனம் ஷெட்டியும் வெளிப்படையாக பேசி கன்டென்ட் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில் விவாத மேடை போட்டியில் சுரேஷ் புகாருக்கு எதிராக ஷனம் பதில் கூறுகிறார். அதில் ஷனத்திற்கு ஆதரவாக பாலா, ஆரி, ரம்யா ஆகியோர் நிற்க, சுரேஷுக்கு ஆதரவாக ஷிவானி, ரியோ, அர்ச்சனா, சம்யுக்தா ஆகியோர் நிற்கின்றனர். இதில் பாலா ஷனத்திற்கு ஆதரவாக பேசுகிறார்.

சுரேஷுக்கு எதிராக மாறிய பாலா : புலம்பும்  ஹவுஸ்மேட்ஸ்!

பின்னர் அர்ச்சனா, சம்யுக்தா பாலாவிடம் ஷனத்திற்கு நீங்க ஆதரவாக பேசுனது உங்கள சப்போர்ட் பண்ணவங்கல முட்டாள்னு நெனைக்க தோணுது என்று கூறுகிறார். அதற்கு பாலா தோல்வியடைய போறவங்கள ஜெயிக்கவைக்குறது தான் கெத்து என்று கூறும் படியாக ப்ரோமோ முடிகிறது .