கோழி பண்ணை டாஸ்க்கிலும் வழக்கம் போல சண்டை : மீம்ஸ் போட்டு கலாய்க்கும் ரசிகர்கள்!

 

கோழி பண்ணை டாஸ்க்கிலும்  வழக்கம் போல சண்டை : மீம்ஸ் போட்டு கலாய்க்கும் ரசிகர்கள்!

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான இரண்டாவது ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

கோழி பண்ணை டாஸ்க்கிலும்  வழக்கம் போல சண்டை : மீம்ஸ் போட்டு கலாய்க்கும் ரசிகர்கள்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் 72 ஆம் நாளான இன்று ஹவுஸ்மேட்ஸுக்கு கோழி பண்ணை டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஹவுஸ்மேட்ஸ் நரியாகவும், கோழியாகவும் உள்ளனர்.நரியிடமிருந்து முட்டையை காக்க வேண்டும் என்ற இந்த டாஸ்கில் திருட வரும் நரியின் வாலை தொட்டால், நரியாக உள்ளவர் ஆட்டத்தில் இருந்து வெளியேறுவார். அதேசமயம் பணத்தை வைத்தும் நரி -முட்டையை எடுக்காதபடி கோழி டீல் செய்து கொள்ளலாம் என்பது தான் டாஸ்க்.

இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 4 இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது ப்ரோமோவில் அர்ச்சனா – ஆரி இடையே மோதல் ஏற்படுகிறது. அதில் அர்ச்சனா, லாஜிக்கலா யோசிங்க முட்டையை எடுக்க நரி தனியா வராது கூட்டமா தான் இருக்கும் என்கிறார்.

கோழி பண்ணை டாஸ்க்கிலும்  வழக்கம் போல சண்டை : மீம்ஸ் போட்டு கலாய்க்கும் ரசிகர்கள்!

அதற்கு ஆரி எதிர்ப்பு தெரிவிக்க, சரி எப்படி ஆடணும்னு சொல்லுங்க என்று அர்ச்சனா கேட்கிறார்.ஆனால் அதற்கு பதில் சொல்லாத ஆரி, ரூல் புக்ல ஏதும் சொல்லலல. அப்போ நான் இனிமே ஆடுறேன்னு பாருங்க என்று அர்ச்சனா , ரம்யாவிடம் சத்தம் போடுவது போல ப்ரோமோ வீடியோ முடிகிறது.

கோழி பண்ணை டாஸ்க்கிலும்  வழக்கம் போல சண்டை : மீம்ஸ் போட்டு கலாய்க்கும் ரசிகர்கள்!

எப்படியும் இந்த டாஸ்க்கையம் சுவாரஸ்யமாக எடுத்து செல்லாமல் ஹவுஸ்மேட்ஸ் சண்டை போடுவார்கள் என்பது ஏற்கனவே எதிர்பார்த்த ஒன்று தான்.

https://twitter.com/Coimbatoreian/status/1338737776481554432

அதை வெற்றிகரமாக தொடங்கியுள்ளனர் ஆரி – அர்ச்சனா. இந்த டாஸ்க்கும் சண்டையில் முடிந்தால் பிக் பாஸின் ரியாக்ஷன் என்னவாக இருக்கும் என்பதே பெரிய கேள்விக்குறி…