பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 4 தமிழ் நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட ஒருவாரம் முடிந்து விட்டது. கடந்த இரண்டு நாட்களாக கமல் ரசிகர்களுக்கு தரிசனம் தந்தார். நேற்றைய நிகழ்ச்சியில் ஷனம் – பாலா இடையே மோதல், கமல் பஞ்சாயத்து, அரசியல் வசனம் என நிகழ்ச்சி சுவாரஸ்யமாக சென்றது. அதே சமயம் முக்கிய பொறுப்பான வீட்டின் தலைவர் பொறுப்பு சுரேஷ் சக்கரவர்த்தியிடம் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோவில் எலிமினினேஷன் ப்ராசஸ் ஆரம்பமாகியுள்ளது. அதில் ரேகா, கேப்ரில்லா, ஷனம், சம்யுக்தா, ஆஜித், ரம்யா, ஷிவானி உள்ளிட்ட 7 பேரில் இருந்து எவிக்ஷன் நாமினேட் செய்ய பிக் பாஸ் கூறுகிறார். அப்போது முதல் ஆளாக வரும் சுரேஷ், ஷனம் மற்றும் ஆஜித்தை நாமினேட் செய்கிறார். இப்படி பலரும் ஷனம் மற்றும் ஷிவானியை நாமினேட் செய்யும்படியாக இந்த ப்ரோமோ முடிகிறது.