வீட்டுக்குள் மீண்டும் கொளுத்தி போட்ட பிக் பாஸ் : இந்த வாரம் வெளியேறுகிறாரா சுரேஷ்?

 

வீட்டுக்குள் மீண்டும் கொளுத்தி போட்ட பிக் பாஸ்  : இந்த வாரம் வெளியேறுகிறாரா சுரேஷ்?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

வீட்டுக்குள் மீண்டும் கொளுத்தி போட்ட பிக் பாஸ்  : இந்த வாரம் வெளியேறுகிறாரா சுரேஷ்?

நேற்றைய நிகழ்ச்சியில் பிக்பாஸ் வீடு ஆனந்த வீடா… போரட்டக்களமா? இதுதான் தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. இறுதியில் இதற்கான தீர்ப்பை வழங்கிய அர்ச்சனா, போட்டிகள் உள்ள அன்பான வீடு என்று கூறி நிகழ்ச்சியை முடித்து வைத்தார்.பின்னர் வட்டமாக சேர்களைப் போட்டு அட்டைப் பெட்டியை மாற்ற வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் வேல்முருகன் பாட ஹவுஸ் மேட்ஸ் வேகமாக அட்டை பெட்டியை மாற்றி கொண்டிருந்தனர். இதில் சுரேஷ் வெற்றி பெற்றார்.

இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோவில், உங்களை நீங்களே ஒன்றிலிருந்து 16 வரை வரிசைப்படுத்த வேண்டும். 1 ஆம் எண் பிக் பாஸ் சீசன் 4 இன் வெற்றியாளரை குறிக்கும். அதை தொடர்ந்து வரும் வரிசை ஒவ்வொரு வார எவிக்ஷனை குறிக்கும். 16வதாக நிற்கும் நபர் இந்த வாரம் எவிக்ஷனில் வெளியேற்றப்படுவராக இருக்கலாம் என்று சொன்னதும் 16 வது நபராக சுரேஷ் நிற்பது போல ப்ரோமோ முடிகிறது.