ஷிவானியிடம் பேச தயங்கும் பாலா ; லவ் டிராக்கை தூசி தட்டும் பிக் பாஸ்

 

ஷிவானியிடம் பேச தயங்கும் பாலா ; லவ் டிராக்கை தூசி தட்டும் பிக் பாஸ்

பிக் பாஸ் இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

ஷிவானியிடம் பேச தயங்கும் பாலா ; லவ் டிராக்கை தூசி தட்டும் பிக் பாஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து கிட்டத்தட்ட 103 நாட்கள் ஆகிறது. இதுவரை இந்த நிகழ்ச்சியிலிருந்து 9 பேர் வாக்குகளின் அடிப்படையில் வெளியேறிய நிலையில் நேற்றைய தினம் கேப்ரில்லா பிக் பாஸ் கொடுத்த ரூ.5 லட்சம் ரூபாயுடன் வெளியேறினார். தற்போது இறுதி போட்டியில் ஆரி, பாலா, சோம், ரியோ மற்றும் ரம்யா ஆகியோர் உள்ளனர்.

ஷிவானியிடம் பேச தயங்கும் பாலா ; லவ் டிராக்கை தூசி தட்டும் பிக் பாஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சி இன்னும் இரண்டு நாட்களில் முடிவடைய உள்ள நிலையில் பொங்கல் பண்டிகைக்காக நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஹவுஸ்மேட்ஸ் மீண்டும் வீட்டுக்குள் எண்ட்ரி கொடுத்துள்ளனர். இதனால் வீட்டினுள் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், இன்று பிக் பாஸ் வீட்டுக்குள் எண்ட்ரி கொடுக்கும் ஷிவானி, வேல்முருகன் – ரேகாவுடன் நின்று பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது ரேகா சிங்கப் பெண்ணே என்ற பாடல் ஒலித்த தருணம் பற்றி பாராட்டிப் பேசிக் கொண்டிருக்கையில் பாலா அங்கு வருகிறார். பாலாவை பார்த்த ஷிவானி என்ன ஆச்சு உடம்பு சரியில்லையா? என்று கேட்க, அதெல்லாம் ஒன்றுமில்லை என்று பாலா செல்கிறார். வந்ததிலிருந்து பார்க்கிறேன்; நீ சோகமாக இருக்கிறாய் என்று ஷிவானி கேட்க பாலா ஒன்றுமில்லை என்று தயங்கி தயங்கி நிற்கும் படியாக ப்ரோமோ வீடியோ முடிகிறது