“அட்வைஸ் குடுக்குறேன்னு என் வாய தான் அடைச்சிட்டாங்களே”… ஆஜித் குடும்பத்திடம் புலம்பும் ஆரி

 

“அட்வைஸ் குடுக்குறேன்னு என் வாய தான் அடைச்சிட்டாங்களே”… ஆஜித் குடும்பத்திடம் புலம்பும் ஆரி

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

“அட்வைஸ் குடுக்குறேன்னு என் வாய தான் அடைச்சிட்டாங்களே”… ஆஜித் குடும்பத்திடம் புலம்பும் ஆரி

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் தற்போது ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதுவரை ஷிவானியின் அம்மா , பாலாவின் அண்ணன் ரமேஷ் , ரியோவின் மனைவி ஸ்ருதி, ரம்யாவின் அம்மா, தம்பி என பிக் பாஸ் வீட்டுக்குள் எண்ட்ரி கொடுத்தனர். அத்துடன் சோம் சேகரின் தம்பி பிக் பாஸ் வீட்டுக்குள் வந்ததுடன் அண்ணனுக்கு அட்வைஸும் கொடுத்து விட்டு சென்றார். அதே சமயம் அர்ச்சனா, சாரா உன்னை கேட்டனர் என்று சொல்லி விட்டு சென்றார்.

இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சியில் ஆஜித் அம்மா மற்றும் அக்கா வருகை தருகின்றனர். இத்தனை நாட்கள் ஆகியும் பேச மாட்டுறான் என்று அம்மா கவலைப்பட, ஆஜித் ரொம்ப சின்ன பையன் நீங்க நாமினேட் பண்ணும் தெளிவா அவன் என்ன பண்ணனும்ன்னு சொல்லிருக்கணும் என்று அவரின் அக்கா ஆதங்கப்படுகிறார்.

“அட்வைஸ் குடுக்குறேன்னு என் வாய தான் அடைச்சிட்டாங்களே”… ஆஜித் குடும்பத்திடம் புலம்பும் ஆரி

அதற்கு ஆரி அத நான் அட்வைஸ் குடுக்குறேன்னு என் வாய அடைச்சிட்டாங்களே என்று சொல்கிறார். ஃப்ரீஸ் டாஸ்கில் கடைசி நாளான இன்று கேபி,ஆஜித் மற்றும் ஆரி குடும்பம் வருகை தரவுள்ளனர். இன்றுடன் ப்ரீஸ் டாஸ்க் முடியவுள்ளதால் நாளை கமலின் விஜயம் இருக்கும்.