“நான் கேட்ட கேள்விக்கு நீங்க இன்னும் பதில் சொல்லல” : ரம்யாவை கலாய்த்த பிக் பாஸ்

 

“நான் கேட்ட கேள்விக்கு நீங்க இன்னும் பதில் சொல்லல” : ரம்யாவை கலாய்த்த பிக் பாஸ்

பிக் பாஸ் இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

“நான் கேட்ட கேள்விக்கு நீங்க இன்னும் பதில் சொல்லல” : ரம்யாவை கலாய்த்த பிக் பாஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மணிக்கூண்டு டாக்ஸ்-க்கு பிறகு இரண்டு நாட்களுக்கு பிறகு கோழி பண்ணை டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் பாலா, அர்ச்சனா சிறந்த போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்டார்கள். அதே சமயம் ஓய்வெடுக்கும் அறைக்கு கேபி மற்றும் ஷிவானி ஆகியோர் அனுப்பி வைக்கப்பட்டனர். அதன்படி இந்த வாரம் வீட்டின் தலைவர் போட்டியில் அர்ச்சனா பாலாவுடன் சேர்ந்து வாரம் முழுக்க ஈடுபாடுடன் இருந்தவராக ரம்யா தேர்வாகி டாஸ்க் செய்கின்றனர். இதில் அர்ச்சனா வெற்றி பெறுவது போல முதல் ப்ரோமோ வெளியாகி இருந்தது.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில் ரம்யா பாண்டியனை பிக் பாஸ் கன்ஸ்ட்ரக்ஷன் ரூமிற்கு அழைக்கிறார் . அங்கு இந்த வீட்டில் நீங்கள் வெளிப்படுத்திய உணர்ச்சிகள் குறித்து கேட்கும் பிக்கி, எனக்கு யாரையாது பிடிக்கலைன்னா அந்த இடத்துலயே இருக்க மாட்டேன். நான் எனக்கு எது சரின்னு தோணுதோ அதன்படி கோவப்படுவேன்.

“நான் கேட்ட கேள்விக்கு நீங்க இன்னும் பதில் சொல்லல” : ரம்யாவை கலாய்த்த பிக் பாஸ்

அழுகையில் உண்மை இருக்குறதும், பொய் இருக்குறதும் ரெண்டுமே பார்க்கலாம் என்று கூறிவிட்டு உங்க கிட்ட ஒன்னு கேட்கவா பிக் பாஸ் என்று கேட்கிறார் . அதற்கு பிக் பாஸ் , நான் கேட்ட கேள்விக்கு நீங்க இன்னும் முழுசா பதில் சொல்லையே என்று சொல்ல ரம்யா வழக்கம் போல சிரிக்கிறார். அப்போது அனிதா பிக் பாஸை கன்ஃபியூஸ் செய்து அவரையும் சிரிக்க வைத்து வெளியே வந்திருக்கிறார் ரம்யா என்று செய்தி வாசிப்பது போல ப்ரோமோ வீடியோ முடிகிறது.