“தலைகீழாக தான் குதிப்பேன் ” : குப்புற விழுந்த அறந்தாங்கி நிஷா : வைரல் வீடியோ!

 

“தலைகீழாக தான் குதிப்பேன் ” : குப்புற விழுந்த அறந்தாங்கி நிஷா : வைரல் வீடியோ!

பிக் பாஸ் 4 தமிழ் நிகழ்ச்சியின் மூன்றாவது ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

“தலைகீழாக தான் குதிப்பேன் ” : குப்புற விழுந்த அறந்தாங்கி நிஷா : வைரல் வீடியோ!

தமிழக மக்கள் ஆர்வமாக எதிர்பார்த்து காத்துக்கிடந்த பிக் பாஸ் சீசன் 4 நேற்றுமுதல் ஆரம்பமாகியுள்ளது. விஜய் டிவி பிரபலங்கள், நடிகர், நடிகைகள் என மொத்தம் 16 பேர் கலந்துகொண்டுள்ள இப்போட்டியில் முதல்நாளான இன்று ஏற்கனவே 2 ப்ரோமோக்கள் வெளியாகி பேசும் பொருளாகியுள்ளது.

இந்நிலையில் பிக் பாஸ் 4 தமிழ் நிகழ்ச்சியின் மூன்றாவது ப்ரோமோவில் ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் விளையாடுகிறார்கள். அதில் ரம்யா பாண்டியன் டிக் டிக் யாரது என்ற ஆட்டத்தை ஆரம்பிக்க நிஷாவை லாவகமாக ஓடிச்சென்று பிடிக்கிறார். அடுத்ததாக நிஷா ஆட்டத்தை ஆரம்பிக்க, அனிதா சம்பத்தை பிடிக்க ஓடும் போது கீழே விழுந்து விடுகிறார் நிஷா . உடனே ஹவுஸ்மேட்ஸ் நிஷாவை தூக்கி ஆறுதல் சொல்ல, ரியோவோ,எ அவர் அப்படி தான் அடிக்கடி விழுவார் என்று சொல்வது போல ப்ரோமோ முடிகிறது.