“உன் மேல காதல் வராது ” : பாலா ஓபன் டாக் : அதிர்ச்சியில் ஷிவானி

 

“உன் மேல காதல் வராது ” : பாலா ஓபன் டாக் : அதிர்ச்சியில் ஷிவானி

பிக் பாஸ் இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

“உன் மேல காதல் வராது ” : பாலா ஓபன் டாக் : அதிர்ச்சியில் ஷிவானி

பிக் பாஸ் சீசன் 4 தொடங்கியது முதல் சண்டைக்கு பஞ்சமில்லாமல் உள்ளது. கடந்த ஒரு வாரம் மட்டுமே சண்டை குறைவாக இருந்தது என்பது பிக் பாஸ் ரசிகர்களின் கருத்து. தீபாவளி வாரம் என்பதால் மகிழ்ச்சியாக டாஸ்கை செய்து முடிக்க பிக் பாஸ் கண்டிஷன் போட்டதால் மட்டுமே கொஞ்சம் ஹவுஸ்மேட்ஸ் கட்டுக்கோப்பாக இருந்தனர் எனலாம்.

இந்நிலையில் இந்த வார நாமினேஷன் ப்ராசஸில் ஹவுஸ்மேட்ஸ் நாமினேட் செய்ய சொன்ன காரணங்களை பிக் பாஸ் போட்டுடைக்கிறார். ஆனால் யார் சொன்னது என்பதை அவர் தெரிவிக்கவில்லை. அதன்படி, நான்ஸிங்க்ல போறாங்க, சிடுமூஞ்சி, காதல் கண்ணை மறைக்குறது உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து நாமினேஷன் நடந்தது என்று சொல்கிறார். அப்போது பாலா எல்லாரும் கேட்டுங்க, இங்க காதலாம் எவனும் பண்ணல. ஏதாவது டாக் இருந்து என் காதுக்கு வந்தா நான் ஏதாவது கேட்பேன் என்று சொல்கிறார். பின்னர் ஷிவானியிடம் ஒருவேளை லவ் வந்தா உன்கிட்ட சொல்லுறேன் சரியா? வராது… வந்தா சொல்லுறேன் என்று சொல்லிவிட்டு செல்லும் படியாக ப்ரோமோ முடிகிறது.