‘அனுபவமும், வயசும் இல்ல ‘ : முதல்நாளே ஷிவானியை டார்க்கெட் செய்யும் ஷனம் ஷெட்டி

 

‘அனுபவமும், வயசும் இல்ல ‘ : முதல்நாளே ஷிவானியை டார்க்கெட் செய்யும் ஷனம் ஷெட்டி

பிக் பாஸ் 4 தமிழ் நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 4 நேற்று கோலாகலமாக தொடங்கியது. இந்தாண்டு பிக் பாஸ் வீட்டிற்குள் நடிகர் ரியோ, நடிகை ஷனம் ஷெட்டி உள்ளிட்ட 16 பேர் போட்டியாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளனர். வெவ்வேறு துறை, வயது என வழக்கமான முரண்பாடுகளுடன் களமிறக்கப்பட்டுள்ள பிக் பாஸ் போட்டியாளர்கள் கடந்த சீசன் போல மக்களை மகிழ்விப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

‘அனுபவமும், வயசும் இல்ல ‘ : முதல்நாளே ஷிவானியை டார்க்கெட் செய்யும் ஷனம் ஷெட்டி

இந்நிலையில் பிக் பாஸ் 4 தமிழ் நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில், ஹாட் பிரேக் என்ற தலைப்பில் ஒருவரை தேர்ந்தெடுக்க சொல்ல, ஷனம் மற்றும் சம்யுக்தா போன்றோர் ஷிவானியை தேர்வு செய்கின்றனர். இதனால் சோகத்தில் ஹவுஸ்மேட்ஸ் முன் நிற்கும் ஷிவானியை தனது பங்குக்கு வறுத்தெடுத்தெடுக்கிறார் நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி. ஷனம், ஷிவானிக்கு அனுபவம் மற்றும் வயது குறைவு என்பதால் அவர் தனித்து தெரிவதாக கூற, நான் இந்த இடத்தில் பேசணும், அதற்கு உரிமை இல்லாவிட்டால் நான் பேசவில்லை என்று கடுப்பாக ஷிவானி கூறுவது போல ப்ரோமோ முடிகிறது.

இதை பார்த்த ஷிவானி ரசிகர்கள் முதல் நாளே அவரை டார்க்கெட் செய்வதாக சமூக வலைதளங்களில் கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள்.