“வெளியேற்றி விடுவோம்” அர்ச்சனாவை எச்சரித்த கமல் ஹாசன்

 

“வெளியேற்றி விடுவோம்” அர்ச்சனாவை எச்சரித்த கமல் ஹாசன்

பிக் பாஸ் இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

“வெளியேற்றி விடுவோம்” அர்ச்சனாவை எச்சரித்த கமல் ஹாசன்

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த மூன்று சீசன்கள் போல் இல்லாமல் எரிச்சலூட்டும் படியாகவே உள்ளது ரசிகர்களின் கருத்து. இதனால் தான் டிப்ஸ் என்ற பெயரில் கமல் வாரந்தோறும் வந்து எச்சரித்து விட்டு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார் . ஆனால் 70 நாட்கள் ஆகியும் மாற்றம் ஏதுமில்லை என்பதால் தான் இந்த வாரம் 2 பேர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோவில், கமல் மைக் எல்லாரும் சரியா போட்டிருக்கீங்களா என்று கேட்கிறார். அதற்கு அர்ச்சனா வழக்கம் போல யெஸ் …சார், என்று சொல்ல, அர்ச்சனா நீங்க மட்டும் மைக் கழட்டி வைப்பது விதிமீறலா இருக்கு.

“வெளியேற்றி விடுவோம்” அர்ச்சனாவை எச்சரித்த கமல் ஹாசன்

சோம், நிஷா மற்றும் ஷிவானி கூட பேசும் போது கூட மைக் கழட்டி வச்சிடீங்க. இப்படி பண்ணவங்கள பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றுன கதைலாம் நடந்துருக்கு என்று சொல்லும் படியாக ப்ரோமோ முடிகிறது.