” தன்னை காப்பாத்திக்க மத்தவங்கள தப்பா ப்ரொஜெக்ட் பண்ணுறாரு”… புலம்பும் ரம்யா – ஷிவானி

 

” தன்னை காப்பாத்திக்க மத்தவங்கள தப்பா ப்ரொஜெக்ட் பண்ணுறாரு”… புலம்பும் ரம்யா – ஷிவானி

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

” தன்னை காப்பாத்திக்க மத்தவங்கள தப்பா ப்ரொஜெக்ட் பண்ணுறாரு”… புலம்பும் ரம்யா – ஷிவானி

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் 85 நாட்களில் இதுவரை சொல்லும் படியாக எதுவும் நடக்கவில்லை. கடந்த சீசன்களை விட இந்த சீசன் மிகவும் போரிங்காக உள்ளதால் ஒரு பண்டிகையையும் விடாமல் பிக் பாஸ் கொண்டாடி வருகிறார். இதுவரை 9 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய நிலையில் மீதம் 9 பேர் ஆட்டத்தில் உள்ளனர்.

” தன்னை காப்பாத்திக்க மத்தவங்கள தப்பா ப்ரொஜெக்ட் பண்ணுறாரு”… புலம்பும் ரம்யா – ஷிவானி

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில் ரம்யா ஷிவானியிடம், ஆரி வந்து எல்லாமே கரெக்ட்டா பண்ணனும்னு நினைச்சி பண்ணுறாரு. ஆனா அது ஆடியன்ஸுக்கு பிடிக்குதா? இல்லையான்னு எனக்கு எப்பவுமே ஒரு சந்தேகம் இருக்கும். நேத்து வந்த கால் கூட எனக்கு சந்தேகமா தான் இருக்கு. பிடிச்சிருக்கு அப்படினு எந்த ஆங்கிள்லயும் எனக்கு தோணல என்று சொல்கிறார். அதற்கு ஷிவானியோ குரூப்பிஸம் இருக்கு இதெல்லாம் கரெக்ட்டா தான் சொல்லுறாரு.

ஆனா அவருக்குன்னு ஒன்னு வரும் போது , ரொம்ப செல்ஃபிஷ்ஷா மத்தவங்கள ப்லேம் பண்ணி விட்டுடுறாரு என்று கூறுகிறார். அதற்கு ரம்யாவோ, கெடைக்குற கேப்லலாம் அவரோட பிளஸ்ஸையும், மத்தவங்களோட மைனஸையும் சொல்லுறதுனால எனக்கு அப்படி தோணுது என்று கூற, தன்னை காப்பாத்திக்க மத்தவங்கள தப்பா ப்ரொஜெக்ட் பண்ணுறாரு என்று ஒரே போடாக போடுகிறார் ஷிவானி… இப்படியாக ப்ரோமோ வீடியோ முடிகிறது.