புலிகேசியாக மாறிய ரியோ ; அரக்கனாக மாறிய சுரேஷ் : களைகட்டும் பிக் பாஸ் வீடு!

 

புலிகேசியாக மாறிய ரியோ ; அரக்கனாக மாறிய சுரேஷ்  : களைகட்டும் பிக் பாஸ் வீடு!

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் 17 போட்டியாளர்கள் இருந்த நிலையில் ரேகா எலிமினேஷன் ஆனதால் 16 போட்டியாளர்களே உள்ளனர். நேற்றைய நிகழ்ச்சியில் இந்த வாரம் எவிக்ஷனுக்கு அனிதா சம்பத், சுரேஷ், ஆரி, பாலா மற்றும் ஆஜித் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டனர்.

புலிகேசியாக மாறிய ரியோ ; அரக்கனாக மாறிய சுரேஷ்  : களைகட்டும் பிக் பாஸ் வீடு!

நாமினேட் ஆனதும் அதை பொறுத்துக்கொள்ள முடியாமல் அனிதா சம்பத் கோபத்தையும் அழுகையையும் வெளிப்படுத்தினார்.

இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள முதல் ப்ரோமோவில், அரக்கர்களும் அரக்கிகளும் உங்களை என்ன தான் தொந்தரவு செய்தாலும், நீங்க அதுக்கு எந்த ரியாக்ஷனும் காட்டாமல் சிலையா இருங்க என்று டாஸ்க்கை படிக்கிறார் ரியோ.

புலிகேசியாக மாறிய ரியோ ; அரக்கனாக மாறிய சுரேஷ்  : களைகட்டும் பிக் பாஸ் வீடு!

இதில் ரமேஷ் ,சுரேஷுக்கு அரக்கன், ஷிவானி, அனிதாவுக்கு அரக்கி வேடம் தரப்படுகிறது. ரியோ புலிகேசியாக மாறுகிறார். அதற்காக அவர் தனது ஷேவ் செய்துகொள்கிறார் . நான் தாடியோட இருக்கும் போது தான் மாஸாக இருக்கும். இல்லனா குழந்தை மாதிரி இருப்பேன் என்று சொல்லி சிரிக்கிறார். இதை பார்த்த சுரேஷ், சோ க்யூட்; அழகா இருக்கடா என்று கூறுகிறார்.