• February
    27
    Thursday

Main Area

Main



'குளோசப்ல வேணாம்மா பயமா இருக்கு'...வீடியோ காலிங்கில் மனைவியை பங்கமாக கலாய்த்த சாண்டி

சாண்டி
சாண்டி


பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான மூன்றாவது  புரொமோ  வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

sandy

பிக்பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. 4 போட்டியாளர்கள் இறுதிக் கட்டத்திற்கு முன்னேறியுள்ள நிலையில் இன்று 103 வது நாளை தொட்டுள்ளது. இன்று பிக் பாஸ் வீட்டுக்குள் கவின் மற்றும் தர்ஷன் ஆகியோர் வருகின்றனர்.

 

இந்நிலையில் பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான  மூன்றாவது புரொமோ  வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் சாண்டி தனது மகளை வீடியோ காலில்  பார்க்கிறார். அப்போது உணர்ச்சிவசப்பட்டு அழும் சாண்டிக்கு  அவரது  மனைவி ஆறுதல் கூறுகிறார். பிறகு மனைவியிடம் எப்படிமா இருக்க? என்று கேட்கும் சாண்டி, குளோசப்ல வேணாம்மா பயமா இருக்கு... கொஞ்சம் முகத்த தூரத்துல வச்சிக்கோம்மா என்று கூறி கிண்டல் செய்கிறார். பின்பு அவரது மனைவி, உங்கள நெனைச்சி ப்ரௌடா இருக்கோம் என்று சொல்ல, அதற்கு சாண்டி, என்ன பவுடர் போட்டுட்டு இருக்கீங்களா? என்று கேட்டு கவுண்டர் கொடுக்கிறார். 

2018 TopTamilNews. All rights reserved.