• February
    25
    Tuesday

Main Area

Main



எதுக்கு உள்ளே வந்த; பார்க்குறவனெல்லாம் காறித்துப்பவா? லாஸ்லியாவை திட்டி தீர்க்கும் தந்தை!

லாஸ்லியா
லாஸ்லியா

பிக் பாஸ் வீட்டுக்குள் வந்துள்ள  லாஸ்லியாவின் தந்தை கவின் விவகாரத்தால் லாஸ்லியாவை திட்டி தீர்த்துள்ளார். 

பிக் பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சி 80 வது நாளை தொட்டுள்ளது. பிக் வீட்டில் நேற்றிலிருந்து ஃப்ரீஸ் டாஸ்க் நடந்து வருகிறது. நேற்று முகினின்  அம்மா நிர்மலா மற்றும் தங்கை ஜனனி பிக் பாஸ் வீட்டுக்குள் வருகை புரிந்திருந்தனர். இதையடுத்து  இன்றைய நிகழ்ச்சியில் பிக் பாஸ் வீட்டுக்குள் லாஸ்லியாவின் தந்தை வருகிறார். அவரை கண்ட லாஸ்லியா காலில் விழுந்து கதறும் படியாக அந்த வீடியோ இடம்பெற்றிருந்தது.

losliya

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது புரொமோ  லீக்காகியுள்ளது. அதில், கவின் விஷயத்தில் லாஸ்லியா மீது கடும் கோபம் கொண்டுள்ள அவரது தந்தை, உன்ன அப்படியா வளர்த்தேன் நான். இங்க கதைக்க கூடாது என்று கூற சேரன் அவரை சமாதானம் செய்கிறார். அதற்கு நான் அப்படி வளர்க்கல, என்ன சொல்லி வந்த உள்ளே; கண்டவன் காறித்துப்புறதை நான் பார்க்கவா' என்று திட்டி தீர்க்கிறார். 

 

லாஸ்லியா - கவின் காதல் விவகாரத்தில் சேரனை போலவே லாஸ்லியாவின் அப்பாவும் வெளியே போய் பேசிக்கலாம் என்று சொல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் லாஸ்லியா மீதான அவரது கோபம் கவின் -லாஸ்லியா ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

2018 TopTamilNews. All rights reserved.