kaappan-mobile kaappan-large
  • September
    21
    Saturday

Main Area

Main

kaappan-mobile kaappan-large


பிக் பாஸ் வீட்டுக்குள் வரும் லாஸ்லியாவின் தந்தை: கதறி அழுத லாஸ்லியா!

லாஸ்லியா
லாஸ்லியா
Loading...

சென்னை:  பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது  புரொமோ  வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

losliya

பிக் பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சி 80 வது நாளை தொட்டுள்ளது. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் சேரனுடன் சேர்த்து 8 பேர் உள்ளனர். இதில் சேரன் மட்டும் சீக்ரெட் ரூமில் வைக்கப்பட்டு  இருந்த நிலையில் தற்போது மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளார்.

 

இந்நிலையில்  பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது  புரொமோ  வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், ஆனந்த யாழை மீட்டுகிறாய் என்ற பாடல் ஒலிக்கப்பட லாஸ்லியா கதறி அழ தொடங்குகிறார். அப்போது பிக் பாஸ் வீட்டுக்குள் லாஸ்லியாவின் தந்தை வருகிறார். அவரை கண்ட லாஸ்லியா காலில் விழுந்து கதறுகிறார்.

கடந்த 10 ஆண்டுகளாகத் தந்தையைப் பார்க்காமலிருந்த வந்த லாஸ்லியாவுக்கு ஃப்ரீஸ் டாஸ்க் மூலம் தனது தந்தையை பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது அவர்  பிக் பாஸ் டைட்டிலை வென்றதற்குச் சமம்  என்றே தோன்றுகிறது. 

2018 TopTamilNews. All rights reserved.