kaappan-mobile kaappan-large
  • September
    21
    Saturday

Main Area

Main

kaappan-mobile kaappan-large


கவின்-லாஸ்லியா காதலைக் குத்திக்காட்டிய கமல்ஹாசன்

Loading...

சென்னை: பிக் பாஸ் 3யின் இன்றைக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. 

பிக்பாஸ் மூன்றாவது சீசன் தொடங்கி 60வது நாட்களைக் கடந்துள்ளது. இதுவரை பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா, சாக்ஷி, அபிராமி, சரவணன் மற்றும் மதுமிதா ஆகியோர் வெளியேறியுள்ளனர். வைல்ட் கார்டு எண்ட்ரியாக கஸ்தூரி மற்றும் வனிதா நுழைந்துள்ளனர். 

இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் சேரன், கஸ்தூரி,சாண்டி மற்றும் தர்ஷன் ஆகிய 4 பேர் உள்ளனர். இந்த நிலையில் இன்றைக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. அதில் கமல்ஹாசன், 'உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் அனைவருக்கும் ஒரு தனி படை இருக்கிறது. ஆனால் அந்த படைக்கு தலைமை ஏற்கும் அந்த உணர்வை அவர்கள் தவறவிட்டார்கள் என்று எனக்கு தோன்றுகிறது. 

#Day62 #Promo1 #பிக்பாஸ் இல் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #KamalHaasan #VijayTelevision pic.twitter.com/2TFFgmBZ28
— Vijay Television (@vijaytelevision) August 24, 2019

ஒரு பக்கம் காதல் வழுக்குது, மற்றொரு பக்கம் பாசம் வழுக்குது. வெற்றியை நோக்கி அவர்கள் நகர வேண்டும் என்பதை அவர்களுக்கு நினைவுபடுத்தும் வாரம் இந்த வாரம்' என்று பேசுவது போல் புரோமோ முடிக்கப்பட்டுள்ளது. 
 

2018 TopTamilNews. All rights reserved.