வரி ஏமாற்றும் பெரு நிறுவனங்கள் – ஆண்டுக்கு எவ்வளவு தெரியுமா ?

வரி ஏமாற்றும் பெரு நிறுவனங்கள் – ஆண்டுக்கு எவ்வளவு தெரியுமா ?

உலகம் முழுவதும் செயல்படும் பெரு நிறுவனங்கள், அந்த நாடுகளில் ஏமாற்றும் வரி எவ்வளவு என்று கேட்டால் அதிர்ச்சி ஏற்படுத்துகிறது. இது தொடர்பாக தனியார் அமைப்பு ஒன்று ஆய்வு செய்து விவரங்களை வெளியிட்டுள்ளது.

வரி ஏமாற்றும் பெரு நிறுவனங்கள் – ஆண்டுக்கு எவ்வளவு தெரியுமா ?

அதாவது கார்ப்பரேட் டாக்ஸ் என்கிற வரியில், மிகப்பெரிய மோசடிகளை செய்து வருகிறார்களாம். ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் சுமார் 427 பில்லியன் டாலர் வரி ஏய்ப்பு செய்கிறார்களாம்.
இந்திய மதிப்பில் இது ரூ.31 லட்சத்து 64 ஆயிரம் கோடி என அதிர்ச்சி அளித்துள்ளனர்.உலக நாடுகளில் இவ்வளவு என்றால், இந்தியாவிலும் கார்ப்பரேட் டாக்ஸ் விஷயத்தில் நிதி ஏய்ப்புகள் நடக்காமல் இருக்குமா ? இந்தியாவில் இது சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கிறதாம்.

வரி ஏமாற்றும் பெரு நிறுவனங்கள் – ஆண்டுக்கு எவ்வளவு தெரியுமா ?

வரி சுதந்திரம் தொடர்பான அமைப்பு ஒன்று இந்த ஆய்வை செய்துள்ளது. இந்த ஆய்வில் கூறியுள்ள தகவல்களில் வரி ஏய்ப்பு செய்வதில் முதன்மையாக உள்ளவை பன்னாடு நிறுவனங்கள்தானாம். பல நாடுகளிலும் செயல்படும் இந்த நிறுவனங்கள், பல்வேறு காரணங்கள், சட்ட விதிகளை காரணம் காட்டி வரி ஏய்ப்பு செய்கிறார்களாம்.

வரி ஏமாற்றும் பெரு நிறுவனங்கள் – ஆண்டுக்கு எவ்வளவு தெரியுமா ?

மொத்தமாக நடைபெறும் வரி மோசடிகளில் பன்னாட்டு நிறுவனங்கள் மட்டும் சுமார் 42 சதவீதம் வரை மோசடி செய்வதாகவும் கூறப்பட்டுள்ளது. சாதாரண மக்களுக்கு வரி மேல் வரிபோட்டு சுரண்டும் அரசுகள், பன்னாட்டு நிறுவன வரி ஏய்ப்புகளுக்கு எதிராக தீவிர நடவடிக்கைகளை எடுப்பதில்லை என்றும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.