ஏப்ரல் 1 முதல் உங்க சம்பளம் குறைய போகுது – எதுக்குனு தெரிஞ்சுகோங்க?

 

ஏப்ரல் 1 முதல் உங்க சம்பளம் குறைய போகுது – எதுக்குனு தெரிஞ்சுகோங்க?

இப்போது இருக்கும் ஊதிய விதிகளின்படி அடிப்படை ஊதியம் (Basic Salary) 50 சதவீதத்துக்கும் குறைவாகவே இருக்கிறது. ஆனால் படி தொகை (Allowance) அதிகமாக இருக்கிறது. அதாவது வீட்டு வாடகை படி, அகவிலைப் படி, பயண படி உள்ளிட்டவற்றின் தொகை அடிப்படை ஊதியத்தை விட அதிகமாக இருக்கிறது.

ஏப்ரல் 1 முதல் உங்க சம்பளம் குறைய போகுது – எதுக்குனு தெரிஞ்சுகோங்க?
ஏப்ரல் 1 முதல் உங்க சம்பளம் குறைய போகுது – எதுக்குனு தெரிஞ்சுகோங்க?

அடிப்படை ஊதியம் குறைவாக இருந்ததால் நிறுவனங்களால் பிடிக்கப்படும் பிஃஎப் (PF) எனப்படும் வருங்கால வைப்பு நிதி, கிராஜுவிட்டி (நீங்கள் வேலை பார்த்ததை கௌரவிக்கும் வகையில் ஓய்வுபெறும் போது நிறுவனத்தால் கொடுக்கப்படும் பணி ஓய்வுத்தொகை தான் Gratuity) ஆகியவற்றின் தொகையும் குறைவாகவே இருந்தது. இதனால் நீங்கள் வாங்கும் மொத்த ஊதியமும் அதிகமாக இருந்தது. இந்த விதிகளைத் தற்போது மத்திய அரசு மாற்றியமைத்திருக்கிறது. மாற்றப்பட்ட புதிய விதிகள் ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வரும்.

அமலாகவிருக்கும் புதிய விதிகள் என்னென்ன?

1.ஊழியர்களுக்குக் கொடுக்கும் அடிப்பை ஊதியம் குறைந்தபட்சம் 50 சதவீதம் இருக்க வேண்டும்

2.அடிப்படை ஊதியம் தவிர்த்து வழங்கப்படும் படி தொகை 50 சதவீதத்துக்கு மேல் செல்லக் கூடாது

3.அடிப்படை ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்யப்படும் பிஃஎப் தொகை 12 சதவீதமாக இருக்க வேண்டும் (உதாரணமாக 10 ஆயிரம் ரூபாய் அடிப்படை ஊதியம் என்றால் பிஃஎப் 1,200 ரூபாய் பிடிக்கப்படும்)

4.ஊழியர் ஒருவர் ஐந்து வருடம் ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்தால் மட்டுமே கிராஜுவிட்டி தொகை மொத்தமாக வழங்கப்படும் என்ற பழைய விதி மாற்றப்பட்டு ஒரு வருடம் வேலை பார்த்தாலே கிராஜுவிட்டி தொகையை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ஊழியர்களுக்கு வழங்க வேண்டும் என்ற புதிய விதி அமலாகிறது

5.பிஃஎப்பில் ஊழியர்களின் பங்களிப்பு ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக இருந்தால் வருமான வரி கட்ட வேண்டும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கான தனிப்பட்ட விதிகள்

1.நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்துவிட்டுத் திரும்பியதும் பயணச் செலவை அரசிடமிருந்து பெற்றுக்கொள்ளும் எல்டிசி (Leave Travel Concession) விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன. அதாவது 2020 அக்டோபர் 12ஆம் தேதி முதல் 2021 மார்ச் 31ஆம் தேதி வரையிலும் வாங்கிய பொருட்களுக்கு 12% ஜிஎஸ்டி வரிச்சலுகையைப் பெற்றுக்கொள்ளலாம் அல்லது பயணம் செய்திருந்தால் அதற்கான செலவைப் பெற்றுக்கொள்ளலாம். இது கொரோனாவால் பயணம் செய்ய முடியாததால் ஏற்படுத்தப்பட்ட தற்காலிக தளர்வு தான்.

2.அகவலிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மத்திய அரசு ஊழியர்கள் பெறும் அகவிலைப்படி 25 சதவீதமாக உயரும்.

ஏப்ரல் 1 முதல் உங்க சம்பளம் குறைய போகுது – எதுக்குனு தெரிஞ்சுகோங்க?

புதிய விதிகளால் ஏற்படும் மாற்றங்கள்

1.நிறுவனங்கள் வழங்கும் அடிப்படை ஊதியம் அதிகரித்து, படி தொகைகள் குறையும் பட்சத்தில் ஊழியர்களின் வாங்கும் மொத்த வருமானம் வெகுவாகக் குறையும். அடிப்படை ஊதியத்தில் பிடிக்கப்படும் பிஃஎப், கிராஜுவிட்டி அதிகரிப்பதே இதற்குக் காரணம். முன்பை விட 4 சதவீத அளவுக்கு குறைவான மாத வருமானத்தையே ஊழியர்கள் பெறுவார்கள்.

2.இந்த விதிகளால் நல்ல விஷயமே இல்லையா என்றால் இருக்கிறது. வேலை பார்க்கும்போது குறையும் வருமானங்கள் அனைத்துமே பிற்காலத்தில் நமக்கு உதவுகின்றன. அதற்கும் காரணம் பிஃஎப் மட்டுமே. வருங்கால வைப்பு நிதி அதிகரித்துக்கொண்டே சென்றால் ஊழியர்கள் ஓய்வுபெற்ற பின்னர் அதிகப்படியான வருமானத்தை உறுதிசெய்ய முடியும்.

ஏப்ரல் 1 முதல் உங்க சம்பளம் குறைய போகுது – எதுக்குனு தெரிஞ்சுகோங்க?



மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் புதிய விதிகளால் தற்காலிகமாக எந்தப் பயனும் கிடைக்காது. வருங்காலத்திலேயே அந்தப் பயனை ஊழியர்கள் அடைய முடியும். இதன்மூலம் வயதான பிறகும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய முடியும் என மத்திய அரசு நம்புகிறது.