பாஜகவில் இணைந்தார் ‘பிக் பாஸ்’ மோகன் வைத்யா

 

பாஜகவில் இணைந்தார் ‘பிக் பாஸ்’ மோகன் வைத்யா

பிக் பாஸ் சீசன் 3 பங்கேற்ற மோகன் வைத்யா பாஜகவில் தன்னை இணைத்து கொண்டார்.

பாஜகவில் இணைந்தார் ‘பிக் பாஸ்’ மோகன் வைத்யா

சட்டப்பேரவை தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கும் பாஜகவில் திரை பிரபலங்கள், தொழிலதிபர்கள் பலரும் இணைந்து வருகிறார்கள். காயத்ரி ரகுராம், நடிகை குஷ்பூ, எஸ்.வீ.சேகர், குட்டி பத்மினி, நமீதா உள்ளிட்ட பல பிரபலங்கள் பாஜகவில் உள்ளனர்.

பாஜகவில் இணைந்தார் ‘பிக் பாஸ்’ மோகன் வைத்யா

இந்நிலையில் கர்நாடக இசைக்கலைஞர் மோகன் வைத்திய சென்னையில் தமிழக பாஜக தலைவர் முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். கர்நாடக இசைப் பாடகர், இசைக் கலைஞர், வீணைக்கலைஞர் என பன்முக தன்மை கொண்டவர் மோகன் வைத்யா. புகழ்பெற்ற வீணை கலைஞர் ராஜேஷ் வைத்தியாவின் சகோதரரான இவர் டிவி தொடர்கள் , திரைப்படங்களிலும் நடித்துள்ளார். கடந்த பிக் பாஸ் சீசனில் ‘நைனா’ என்று அழைக்கப்பட்ட மோகன் வைத்யா சில வாரங்களிலேயே போட்டியிலிருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.