பாலா Vs ஷிவானி; அர்ச்சனா Vs நிஷா – சண்டை உருவாகிய டாஸ்க் – பிக்பாஸ்4

 

பாலா Vs ஷிவானி; அர்ச்சனா Vs நிஷா – சண்டை உருவாகிய டாஸ்க் – பிக்பாஸ்4

ஒவ்வொரு வினைக்கும் அதற்கு சமமான எதிர்வினை இருக்கும் என நியூட்டன் விதி சொல்கிறது. பிக்பாச் ரோபோ டாஸ்க்குக்கும் அது பொருந்தும் போல. முன்பகுதியில் ரோபோவாக இருந்தவர்கள் மனிதர்களாக மாறியதும் சித்திரவதைகள் வேறு விதமாக மாறியது. அவை என்னவென்பதை கட்டுரையில் பார்ப்போம்.

முந்தைய நாளின் தொடர்ச்சிடோடு தொடங்கியது நேற்றைய எப்பிசோட், அர்ச்சனாவை கடுப்பேத்திய நிஷா விஷயத்தில் அர்ச்சனா ஒரு பக்கம் அழுதுகொண்டிருக்க, அக்காவைக் காயப்படுத்திட்டேன் என நிஷா ஒருபக்கம் அழுதுகொண்டிருந்தார். இரு பக்கமும் சமாதான தூதுவர்கள் வந்துகொண்டிருந்தனர்.

பாலா Vs ஷிவானி; அர்ச்சனா Vs நிஷா – சண்டை உருவாகிய டாஸ்க் – பிக்பாஸ்4

ஒரு ரோபாவின் கஷ்டம் இன்னொரு ரோபோவுக்குத்தான் தெரியும் என்பதால்  சோம் ரோபோவிடம் கட்டிப்பிடித்து தன் குறையைச் சொல்லிட்டு இருந்தார் அர்ச்சனா.

”என்ன கேம் இது… எனக்குப் பிடிக்கல… உடனே வீட்டுக்குப் போகணும்…. அம்மாவைப் பார்க்கணும்” எனப் புலம்பினார். சோம்ஸ், மற்றவர்களிடம் பர்மிஷன் கேட்டு பேசினார்.

இரவில் நிஷா கதறி கதறி மன்னிப்பு கேட்க ஒருவழியாக சமாதானம் ஆனார் அர்ச்சனா.

பாலா Vs ஷிவானி; அர்ச்சனா Vs நிஷா – சண்டை உருவாகிய டாஸ்க் – பிக்பாஸ்4

இன்னொரு பக்கம், ‘என்னைப் பார்த்து ஏன் அப்படிச் சொன்ன?’னு பாலாவிடம் ஷிவானி கோவித்துக்கொண்டு சென்றார். ‘இதை விளக்க வேண்டிய தேவை இல்லை எனக்கு. ஏன்னா.. இனிமே உங்கக்கிட்ட பேசப்போறதில்லனு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டார். ஷாக்காகி உறைந்தார் பாலா. இனிமே நேரா நேரத்துக்கு யார் ஊட்டிவிடுவாங்கன்னு கவலை பட்டிருப்ப்பாரோ…

அடுத்த நாள் உற்சாகமாக தம்பி பாடலைப் போட்டாலும், ஹவுஸ்மேட்ஸ் உற்சாகமாக ஆக வில்லை. குறிப்பாக, ரோபோக்கள் செம கடுப்பில் எழுந்தார்கள். அவர்களுக்கு ஒரே ஆறுதல். இந்த டாஸ்க் எப்போ உல்டாவாக மாறும் என்பதே.

பாலா Vs ஷிவானி; அர்ச்சனா Vs நிஷா – சண்டை உருவாகிய டாஸ்க் – பிக்பாஸ்4

அனிதாவுக்கும் அந்த கவலை வந்துவிட்டது. எனக்கு முட்டை அலர்ஜி, என்னை யாரும் தொடக்கூடாதுனு ஏகப்பட்ட மனப்பதற்றத்தில் இருந்தார். அர்ச்சனா உன்னைத்தான் குறி வெச்சிருக்காங்கன்னு பாலா சொன்னது, அர்ச்சனாவிடம் ராசியாக முயன்றார். அதற்கு கடும்கடுப்பில் பதில் சொல்லிட்டு போனார்.

‘பாஸி ரோபோன்னு சொன்னதை சொல்லிக்காட்டினாலே இவளால தாங்க முடியல… நாளைக்கு இருக்கட்டும் வெச்சிக்கிறேன்’ என முஷ்டி தட்டினார். ரம்யாவை நாய் மாதிரி கத்தச் சொல்லி விளையாடினார்கள். அவ்வப்போது ரமேஷிக்கு டாஸ்க் கொடுத்தார்கள். கேபியை சிரிக்க வைக்க கடும் முயற்சி எடுத்துத் தோற்றார்கள். காமெடி பண்ணி சிரிக்க வைங்கன்னு சொன்னாக்கூட பழைய விஷயங்களைக் கிளறி கோபம் வர வழைக்கும் கலை ஆரிக்கு மட்டுமே சாத்தியம்போல.

ஒருவழியாக, ரோபோக்கள் இடம்மாறின. நான் டாஸ்க்குக்காக கஷ்டப்பட மாட்டேன் என உடனே சிரித்து வேஷம் கலைத்தார் பாலா. நிஷா விக்கெட்டும் காலி.

பாலா Vs ஷிவானி; அர்ச்சனா Vs நிஷா – சண்டை உருவாகிய டாஸ்க் – பிக்பாஸ்4

அர்ச்சனா நேற்றைய விஷயத்தைப் பேசி, நிஷாவை சூடேத்தினார். அவர் தொட்டால் அழுதுவிடுவேன் என்கிற ரேஞ்சில்தான் இருந்தார். அதனால் எளிதாக அவரை வீழ்த்த முடிந்தது.

இன்னொரு பக்கம் ரம்யா – ஆஜித்தை அடி நொறுக்கி தள்ளினார். பாலா பலரை தங்கச்சி தங்கச்சி என்று சொன்னாலும் நிஜமான அக்கா – தம்பி பாசமும், சண்டையும் ரம்யா – ஆஜித் இடையேதான் பார்க்க முடிகிறது.

இன்னும் அனிதாவை டார்ச்சர் செய்வது போன்ற காட்சிகள் வர வில்லை. நிதானமாகச் செய்வார்கள் போல. அப்போது என்னென்ன பிரச்னைகள் வெடிக்குமோ தெரியவில்லை. இன்றைய எப்பிசோட்டில் அவற்றைக் காணலாம்.