இன்று பிக்பாஸ் சீசன் 4-ன் இறுதிநாள். நேற்றைய எப்பிசோட் பல யூகங்களுக்கு வழி வகுத்தது. பல விஷயங்களால் அப்செட்டான போட்டியாளர்களை உற்சாகப் படுத்தும் பெரும் வேலை கமல்ஹாசனுக்கு. ஆனால், நடந்தது என்ன தெரியுமா… வாங்க கட்டுரையில் பார்ப்போம்.
வெள்ளிக்கிழமை
பெரும் மழை அடித்து ஓய்ந்ததுபோல பெரும் கூட்டம் விடைபெற்று போயிருந்தது. ஐந்து பேரும் ஆளில்லாத காட்டுக்குள் திரிவதுபோல திரிந்தார்கள். இதில் பாலா – ரம்யா – ஆரி என குழுவாகவும் சோம் – ரியோ ஒரு குழுவாகவும் அலைந்தார்கள்.

திருவள்ளுவர் – உழவர் – ராணுவம் ஆகியவற்றைப் பற்றி போட்டியாளர்களைப் பேச சொன்னார்கள். பேசுவதென்றால் அல்வா சாப்பிடுவதுபோல ஆரிக்கு. அதனால் அவர் எளிதாக ஸ்கோர் செய்தார். மற்றவர்கள் பெயரளவில் பேசி முடித்தார்கள். ‘பள்ளிகளில் சாப்பிடும் முன் கடவுளுக்கு நன்றி சொல்வதுபோல விவசாயிகளுக்கு நன்றி சொல்லும் பழக்கத்தைத் தொடங்க வேண்டும்’ என்ற ரம்யாவின் ஆலோசனை செம. அதை ஆரியும் வரவேற்று பேசினார்.
சனிக்கிழமை
‘போட்டியாளர்கள் காற்று போன பலூன் போல சுருங்கி விட்டார்களே’ என்று ஆதங்கத்தோடு பேச்சைத் தொடங்கினார் கமல்ஹாசன். இதையே கேள்வியாக வீட்டுக்குள் அகம் டிவி மூலம் நுழைந்து கேட்டார்.
’சிறப்பு விருந்தினர்கள் வெளியே நடப்பவற்றை அப்படியே சொன்னதால் இந்த நிலை என்று ஆரியைத் தவிர மற்றவர்கள் புலம்பினார்கள். பாலாவுக்கு வேற புலம்பல் இருந்தது. அதுவும் ரியோ இரட்டை தவிப்பு. 5 லட்சம் ரூபாயை விட்டுவிட்டோம் என்பது ஒன்று. நிஷாவும் அர்ச்சனாவும் ரியோவின் மேல் சந்தேகத்தோடு ஒரு கேள்வியைக் கேட்டது மற்றொன்று.

ரியோவிடம் பேசும்போது ‘நீங்க வெற்றியைத் தவற விட்டால்கூட…’ என்று ஆரம்பித்து சில விஷயங்கள் சொல்லிவிட்டு, ‘உங்களுக்கு மட்டுமல்ல… என பேச்சை மாற்றினார். அதேபோல ஆரியைத் தவிர மற்றவர்களிடம் தோல்வி குறித்து பேசினார். இதன்மூலம் ஆரிதான் பிக்பாஸ் டைட்டில் வின்னர் என்பதைச் சொல்லாமல் சொல்லிவிட்டதாகவே ஆடியன்ஸ் புரிந்துகொண்டனர்.
போட்டியாளர்களிடமும் ஆரியைத் தவிர மற்றவர்களுக்கு தான் வெல்லுவோம் என்ற நம்பிக்கை ஒரு சதவிகிதமும் இல்லை என்பதே வெளிப்படையாகவே தெரிந்தது. கமல் சொன்னதுபோல போட்டியாளர்களின் கண்களில் ஒளியே இல்லை. இதற்கு காரணம் சிறப்பு விருந்தினர்கள் என்றாலும் பிக்பாஸ் டீமில் அசட்டையான மனநிலைதான்.
”சிறப்பு விருந்தினர்கள் வெளியே நடப்பதை உல்டா செய்து உங்களை குழப்பியிருக்கலாம் இல்லையா?” என்று புத்திசாலித்தனமாகக் கேட்பதாக ஓர் அம்பை வீசினார் கமல். “18 பேருமா சார்… அப்படி இருப்பாங்க?” என்று கமலையே மடக்கியது பாலா. “சொல்லி அனுப்பியிருக்கலாம் இல்லையா?” என்று கமல் சமாளித்தது போட்டியாளர்களுக்கு நன்றாகே தெரிந்தது. ஆனால், சோம், ரியோ கொஞ்சம் ஆசுவாசமானார்கள்.

5 லட்சத்தோடு எஸ்கேப்பான கேபி வந்து வீட்டுக்குள் இருக்கும் நண்பர்களோடு பேசினார். ரியோவோடு பேசுகையில் கேபிக்கும் ஒரு தயக்கம் இருந்தது. ரியோவுக்கு பெருமளவில் இருந்தது. பணம் என்பது எப்படிப்பட்ட உறவுக்குள்ளும் விரிசலை ஏற்படுத்தும் என்பதற்கு நல்ல உதாரணம்.
பொதுவாக எல்லோருக்கும் வாழ்த்துகளைச் சொன்னார் கேபி. சடங்குபோல நன்றி சொன்னார்கள் போட்டியாளர்கள். கேபிக்காக போடப்பட்ட வீடியோ நன்றாக இருந்தது. அதில் இருந்ததை விடவும் அதிகமான நல்ல காட்சிகள் இருந்ததாக ஆடியன்ஸ்க்கு தோன்றும் விதத்தில் கேபி நிறைய நல்ல விஷயங்கள் செய்திருந்தார்.
இன்று இறுதிநாள் முதலிடம் கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. ஆனால், அடுத்தடுத்த இடங்களில் யார் யார் என்பதே இப்போதைக்கு தெரிய வேண்டியதாக உள்ளது.